Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரியில் வெள்ளப்பெருக்கு.. 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Recommended Video

    காவிரியில் வெள்ளப்பெருக்கு.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - வீடியோ

    ஆடிப்பெருக்கு நாளில் காவிரித்தாய் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடியதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பண்டிகை கொண்டாடினர். மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. காவிரி பாயும் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     CM MK Stalin Discussion 14 district collector Cauvery Flooded 2 lakh cubic feet of water

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக உள்ள நிலையில், அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் 25வது நாளாக தடை நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால், உபரி நீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் போக்கியான 16 கண்மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 500 கனஅடியும், அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் நிரம்பிய நிலையில் இருந்ததால் உபரிநீர் அனைத்தும் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டது. ஏற்கனவே, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. பவானியில் கந்தன் நகர், காவிரி வீதி, பசவேஸ்வரர் வீதி, பழைய பாலம் குப்பம், தலைமை நீரேற்று நிலையம் பின்புறம் என கரையோரப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசித்த 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி மற்றும் கொடுமுடியில் 270 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஈரோடு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி மற்றும் கொடுமுடியில் 270 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனிடையே காவிரி ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 14 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+