"மாஸ்".. மு.க.ஸ்டாலினுக்கு அதிரடி கும்பிடு.. எடப்பாடி பழனிசாமிக்கு செம கைதட்டு.. தெறிக்கவிட்ட அதிமுக
ஸ்டாலினை பார்த்து அதிமுக நிர்வாகிகள் வணங்கி சென்றனர்
சென்னை: நேற்றைய தினம் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்று கொண்டனர்.. இதையொட்டி நடந்த சம்பவங்கள், 2 விதமான கருத்துக்கள் தமிழக அரசியலில் விவாதங்களை கிளப்பி விட்டு வருகின்றன..!
இந்த முறை வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும், நேற்றைய தினம் பதவியேற்று கொண்டனர்.. இதில் அதிமுக, திமுக, பாஜக கட்சிகளை சேர்ந்தோரும் திரண்டிருந்தனர்.
சில நெகிழ்ச்சி தருணங்களும், சில சங்கடங்களை ஏற்படுத்தும் தருணங்களும் நிகழ்ந்தன.. முக்கியமாக திமுக தரப்பில் ஒருசிலர் செல்போனை பயன்படுத்தி உள்ளனர்..
தருணம்

செல்போன்
சட்டசபையில் செல்போன் பயன்படுத்த தடை இருக்கிறது.. அப்படி இருந்தும், பல எம்எல்ஏக்கள் மொபைல் போன்களை பயன்படுத்தினர்... இவர்கள் பெரும்பாலும் புது எம்எல்ஏக்கள்தான்.. அதனால்தான், ஆர்வ மிகுதியில் சட்டசபையில் உட்கார்ந்து கொண்டே செல்பி எடுத்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், அதிகாரிகள் இதை பார்த்து, 'ஜாமர்' பயன்படுத்தி செல்போன்களின் செயல்பாடுகளை முடக்கினர்.

ஆரவாரம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மைக்கில் அறிவிக்கப்பட்டதும், எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்க சென்றார்.. அப்போது, 65 அதிமுக எம்எல்ஏக்களும் மேஜையை வேகமாக தட்டி ஆரவாரம் செய்தார்கள்.. ஆனால், ஓபிஎஸ் பதவியேற்றபோது, அதிமுக உறுப்பினர்கள் யாரும் கைகளை தட்டவே இல்லை.. ஓரிருவர் மட்டுமே மேஜைகளை லேசாக தட்டிஉள்ளனர்.. இது பெருத்த அதிர்ச்சியை அதிமுகவில் ஏற்படுத்தி உள்ளது.

வணக்கம்
அதேபோல, அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கோ, ஓபிஎஸ்ஸுக்கோ வணக்கம் சொல்லவில்லை.. மாறாக, முதல்வர் ஸ்டாலினுக்கும் மூத்த அமைச்சர்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுள்ளனர்.. இதுதான் அதிமுகவுக்கு அடுத்த ஷாக் ஆக உள்ளது.. இது திமுகவுக்கும் ஸ்வீட் ஷாக்காகி இருக்கிறது.

ஆட்சி மாற்றம்
இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆட்சி மாற்றத்தினால் வந்த விளைவா? அல்லது எடப்பாடி அரசின் மீதான நன்றி மறந்த செயலா? என்ற விவாதம்தான் கிளம்பி உள்ளது.. ஆட்சி மாறினால் வழக்கமாக, மனிதர்களும் மாறி கொள்ளும் இயல்பான சுபாவமே இது என்றாலும், இதற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

ஊழல் புகார்
சில மாதங்களுக்கு முன்பே, பல்வேறு அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் ஊழல் புகார்களை நேரில்சென்று லிஸ்ட் போட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருந்தனர் திமுகவினர்... அதேபோல, திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், ஆட்சிக்கு வந்ததும், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோக, ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய போகும் அனைத்து இடங்களிலும் அதிமுகவின் ஊழல் அமைச்சர்கள் குறித்த விமர்சனங்களை அவர்களின் தொகுதியிலேயே வைத்து பேசியிருந்தார்.

திமுக
அதனால்தான், தேர்தல் முடிவுகள் அநேகமாக திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற கணிப்பு வந்தபடி இருந்ததால், முன்கூட்டியே சம்பந்தப்பட்ட சில அதிமுக அமைச்சர்கள் அப்போதே தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மூலமாக ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சமாதான நூல் விட்டு பார்த்தனர்.. தங்கள் மீது எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் வேண்டாம் என்றும் திமுக தலைமைக்கு இவர்கள் மறைமுகமாக கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

வணக்கம்
எனவேதான், திமுக ஆட்சிக்கு வந்ததுமே, பல அதிமுக புள்ளிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுவதாக சொல்லப்படுகிறது.. நேற்றைய தினம், ஸ்டாலினுக்கு வணக்கம் வைத்தவர்களில் சிலரும் இந்த லிஸ்ட்டில் உள்ளவர்கள்தானாம்.. எனினும், இதற்கெல்லாம் ஸ்டாலின் அடிபணிய மாட்டார் என்றும், சொன்னதை செய்து முடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி ஜெயிலுக்கு அனுப்பாமல் விட மாட்டார் என்றும் உறுதிபட சொல்கிறார்கள் திமுகவினர்!
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications