Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கலர்புல்" ஸ்டாலின்.. துபாய் புறப்பட்டார் முதல்வர்.. பதவியேற்று முதல் வெளிநாடு பயணம்.. குஷியில் திமுக

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் இன்று துபாய் செல்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று அரசுமுறை பயணமாக துபாய் புறப்பட்டு சென்றார்.. தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபிக்கும் ஸ்டாலின் இன்று சென்றுள்ளார்.

Recommended Video

    Dubai Expo-வில் CM MK Stalin | MK Stalin In Dubai| Oneindia Tamil

    துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியில் மார்ச் 25ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது.. இதையொட்டி, உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றார்.

     தமிழக அரசு

    தமிழக அரசு

    அங்கு முதல்வரின் பயணம், மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில் உள்ளதாவது: "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து, துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கிறார்.

     மாலை பயணம்

    மாலை பயணம்

    மு.க. ஸ்டாலின் இன்று (24.3.2022) மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்கிறார். உலகக் கண்காட்சிகள், மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய (MEASA) பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது.

     உலக கண்காட்சி

    உலக கண்காட்சி

    இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை மார்ச் மாதம் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார். தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.

    காற்றாலைகள்

    காற்றாலைகள்

    தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுருங்கக் கூறினால், இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு, இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கண்காட்சியில், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில், பங்கேற்றிடும் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதலீடுகள்

    முதலீடுகள்

    இந்த மாபெரும் கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின் போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

     தமிழர்கள்

    தமிழர்கள்

    இவை மட்டுமின்றி, புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் முதலமைச்சர் தலைமையிலான குழுவில் அங்கம் வகிப்பார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     புறப்பட்டார்

    புறப்பட்டார்

    இந்நிலையில், தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றார்.. முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்வருக்கு இது முதல் வெளிநாட்டு பயணமாகும்.. சென்னை ஏர்போர்ட்டில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றார்... அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பூங்கொத்துகள், சால்வைகள் கொடுத்து முதல்வருக்கு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.. முதல்வர் வழக்கமான வெள்ளை, வேட்டி சட்டையில் இல்லாமல், மெரூன் கலரில் பேன்ட்-ஷர்ட்-வேஸ்கோட் அணிந்து கலர்புல்லாக காணப்பட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+