வந்தாச்சு..சென்னையில் காலநிலை பூங்கா! நாளை அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் -இன்னும் இருக்காம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டு இருக்கும் புதிய தீயணைப்பு நிலையங்கள், தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள், வீட்டு வசதிவாரிய கட்டிடங்களை நாளை திறந்து வைக்கும் முதலமைக்க மு.க.ஸ்டாலின் சென்னையில் அமைக்கப்படும் தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா, திண்கரை சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தீயணைப்பு நிலையங்கள், போலீஸ் இழுவை வாகனங்கள், கடற்கரை ரோந்து வாகனங்கள், வீட்டுவசதி வாரிய கட்டடங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க இருக்கிறார்.

காலை 09.30 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
அத்துடன் சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதேபோல் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், நகர் ஊரமைப்பு இயக்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
மேலும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் அமைக்கப்படவுள்ள தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா, இரும்பு மற்றும் எஃகு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள திண்கரை சாலைப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி












Click it and Unblock the Notifications