சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நல்லா படிக்கணும்".. மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கல்வி தொலைக்காட்சி.. ஸ்டாலின் துவங்கி வைத்தார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கல்வி தொலைக்காட்சியில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்... அத்துடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்...!

தொற்று பாதிப்பு காரணமாக, இந்த 2 வருஷமாகவே மாணவர்கள் சரியாக படிக்க முடிவதில்லை.. ஆன்லைன் மூலமே கல்வி தரப்பட்டு வருகிறது..

உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103 உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103

1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களை கடந்த வருடம் ஆல் பாஸ் செய்துவிட்டனர் என்றாலும், பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டும், மார்க் எப்படி போடுவது என்பது குறித்து கல்வித்துறை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

 தொற்று

தொற்று

இப்போது தமிழ்நாட்டில் தொற்று ஓரளவு குறைந்தாலும், முழுமையாக நீங்கவில்லை.. மேலும் 3வது அலை வர போகிறது என்றும் விஞ்ஞானிகள் ஒருபக்கம் எச்சரித்து வருகின்றனர்.. அதனால், இந்த வருடம்கூட பள்ளிகள் திறக்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது... "தொற்று பாதிப்பு குறைந்தால் பள்ளிகள் திறக்கப்படும், ஆனால், அது பொது மக்களின் கையில்தான் உள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்தும் இருந்தார்.

 கல்வி தொலைக்காட்சி

கல்வி தொலைக்காட்சி

கடந்த வருடம், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் சிலரால் வாட்ஸ்-அப் மூலமும் மாணவர்களுக்கான பாடங்கள் நடத்தப்பட்டன.. அதுபோலவே, இந்த ஆண்டும் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டது.. இதற்காக 2 முதல் 12-ம்வகுப்பு வரையான பாடங்களின் புதிய காணொலிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன..

 நூலகம்

நூலகம்

இந்த பணியைதான், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னையில் 5 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தார்.. இதைத் தொடர்ந்து 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

 தொலைக்காட்சி

தொலைக்காட்சி

கல்வி தொலைக்காட்சியுடன் 12 தனியார் டிவிக்களிலும் இந்த காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.. மேலும், கல்வி தொலைக்காட்சியின் யூ-டியூப் தளத்திலும் அப்லோடு செய்யப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எவ வேலு, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு முதல்முறையாக ஸ்டாலின் சென்றது குறிப்பிடத்தக்கது.

 அட்டவணை

அட்டவணை

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் சொல்லும்போது, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஒலி வடிவிலான பாடங்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது, இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றனர்.. மேலும், முதல்வர் ஸ்டாலின், இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்ததை அடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பள்ளிகள் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

English summary
CM MK Stalin provided free textbooks to School students
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X