விபி சிங் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் வாசித்த கருணாநிதியின் 'சனாதன எதிர்ப்பு' புரட்சி கவிதை இது!
சென்னை: மண்டல் கமிஷன் எதிர்ப்பு காலத்தில் நடைபெற்ற நிகழ்வில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாசித்த கவிதையை சென்னையில் இன்று நடைபெற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் சுட்டிக்காட்டி வாசித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் இன்று நடைபெற்ற வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்தியபோது, சில ஆதிக்க சக்திகள் அதை எதிர்த்தார்கள். வன்முறை போராட்டங்களையும் நடத்தினார்கள்.

கருணாநிதி கவிதை: அந்த நேரத்தில், அதேநேரத்தில், கருணாநிதி தலைமையில் இதே கலைவாணர் அரங்கத்தில் ஒரு கவியரங்கம் நடந்தது. மிகுந்த கோபத்துடன் அன்றைய நாள் கவிதை கர்ஜனை செய்தார் தலைவர் கருணாநிதி. அந்தக் கவிதையின் சில வரிகளை மட்டும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்... மண்டல் குழு பரிந்துரையை மைய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா! மனிதாபிமானி வி.பி.சிங்கிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் திருவிழா!" என்று தொடங்கி, சமூகநீதிக்கான குரலாக கருணாநிதியின் கவிதை வரிகள் அனல் தெறித்தது!
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்
அவன் உயர்சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குள்ளே வைத்தானா?
மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன?
களிமண்ணா? சுண்ணாம்பா?
கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக -
இந்நாளில் எவரும் கேட்டால் பட்டை உரியும்
சுடுகாட்டில் அவர் கட்டை வேகும்
- என்று கருணாநிதி பேச்சில், உணர்ச்சிக் கொந்தளித்தது!
இப்போதுகூட இந்த கலைவாணர் அரங்கத்தில் அந்தக் கவிதை வரிகளின் வெப்பத்தை என்னால் உணர முடிகிறது!
விபி சிங்குடன் சந்திப்பு: முதல் சந்திப்பு, 1988-ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது! அப்போது இளைஞர் அணி சார்பில், மாபெரும் ஊர்வலத்தை நான் தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டதட்ட இரண்டு லட்சம் இளைஞர்கள் பங்கெடுத்த அந்த ஊர்வலத்தை, இதே அண்ணாசாலையில், காயிதே மில்லத் கல்லூரி, அன்றைக்கு Arts College என்று பெயர். அந்த கல்லூரிக்கு அருகில் மேதை அமைத்து மாலை தொடங்கி இரவு வரை மேடையில் இருந்தபடி, வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங் அவர்கள். அப்போது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சந்திப்பு, அவர் பிரதமராக ஆனபோது, டெல்லிக்கு சென்று எம்.எல்.ஏ குழுவில் நான் இருந்தேன். சட்டமன்றத்தில் எல்லாக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் பல குழுக்கள் அமைத்தார்கள். அதில் ஒரு குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். அப்போது டெல்லிக்கு சென்றபோது, ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது என்னிடம் வந்தபோது, என்னை அறிமுகம் செய்து வைத்தபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். "இவரை எப்படி மறக்க முடியும். இவர் தான் சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து நடத்தினார்!" என்று மறக்காமல் பாராட்டினார் பிரதமர் வி.பி.சிங்.
வேறு என்ன பெருமை தேவை? : அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு! இன்றைக்கு நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்திருக்கிறேன் என்றால், இதைவிட என்ன பெருமை எனக்கு வேண்டும்? எங்களுடைய அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்துள்ள வி.பி.சிங் அவர்களின் மனைவி சீதா குமாரி அவர்களுக்கும், அவருடைய மகன் அஜயா சிங் அவர்களுக்கும் உங்களுடைய அனைவரின் சார்பில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications