தீர்ப்புக்கு பிறகு அதிர்வேட்டு.. பல்கலை. துணைவேந்தர்கள் உடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தை அரசே மேற்கொள்ள வழிவகுக்கும் சட்டம் தற்போது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 16 ஆம் தேதி துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அவர் ஒப்புதல் அளிக்காத 10 மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி முதல்வரே நியமனம் செய்யலாம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை பல்கலை. வேந்தராக்கும் மசோதாவிற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில் தான் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறையில் முக்கியமான நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆளுநர் தான் அவ்வப்போது துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்துவது வழக்கம். தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications