ஆராய்ச்சி படிப்பு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்-முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
சென்னை: ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 'முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்' செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

1.ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 'முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்' செயல்படுத்தப்படும்.
2. உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாநில விருது இனி ஹெலன் கெல்லர் விருது என அழைப்பபடும்.
3. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவி தொகை ரூ.2000, 40%த்திற்கு மேல் பாதிப்படைந்த புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய 5081 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் கூடுதலாக ரூ.12.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.
4. செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக செயல்படும் 10 அரசு சிறப்பு பள்ளிகளில் பாடத்திட்டம் முழுவதையும் சைகை மொழியில் தயாரித்து எதிர்வினை குறியீடு (QR Code) மூலம் அறிந்துகொள்ளும் வகையில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக முதல் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
5.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவூட்டு மானிய உதவித்தொகை ரூ.1,200 லிருந்து ரூ.1,400 ஆக உயர்த்தி 12,853 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.279.96 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்படும்.
6.பார்வைத் திறன் குறைபாடுடைய அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கற்பிக்கும் கருவிகள் மற்றும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் அடங்கிய பெட்டி ரூ.5000 முதல் ரூ.10000 மதிப்பில் 430 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.34.50 செலவில் வழங்கப்படும்.
7. அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையங்களில் தங்கி பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைக்கான மானியத் தொகை ரூ.500 முதல் ரூ.600க்கு உயர்த்தப்பட்டு 1154 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.11.66 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
8.அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
9.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி அரசு பணியார்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படும்.
10.பழுதடைந்த வாகனங்களுக்கு பதிலாக புதிய இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
11. பழுதடைந்த காதொலிக்கருவிகளுக்கு பதிலாக புதிய காதொலிக்கருவிகள் வழங்கப்படும்.
12. பழுதடைந்த பிரெயில் கைக்கடிகாரங்களுக்கு பதிலாக புதிய பிரெயில் கைக்கடிகாரங்கள் வழங்கப்படும்.
13. அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்படும்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications