மக்களுக்கு தெரியும்.. மக்கள் எல்லாத்தையும் பார்த்துகொண்டு தான் இருக்காங்க.. 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல் முறையாக விஜய் வீடியோ வாயிலாக பேசியுள்ளார். அப்போது சிஎம் சார், பழி வாங்க வேண்டும் என்றால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறினார். மேலும், 5 பிரசார இடங்களுக்கு சென்று இருக்கிறேன். அங்கு எல்லாம் ஒன்னுமே நடக்கல.. ஆனால் கரூரில் மட்டும் இப்படி நடக்குது.. இது எல்லாம் மக்களுக்கு தெரியும்.. மக்கள் எல்லாத்தையும் பார்த்துகொண்டு தான் இருக்காங்க.. என்றும் விஜய் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கடந்த 3 நாட்களாக வாய் திறக்காத விஜய் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் முதல் முறையாக விஜய் வீடியோ வாயிலாக பேசியுள்ளார். அதில் விஜய் கூறியிருப்பதாவது:-

எல்லாருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை.. மனது முழுக்க வலி.. வலி மட்டும் தான்.. கரூருக்கு நான் வந்து பார்க்கவில்லை என விமர்சிக்கிறார்கள்.. அதுக்கு எல்லாம் காரணம் நான் உங்க மீது வைத்த பாசம் தான்.. இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம்..
மக்களுடைய பாதுகாப்புக்காக மட்டும் தான் நாங்க போலீஸிடம் பாதுகாப்பான இடத்தை கேட்கிறோம். ஆனால் நடக்க கூடாத விஷயம் நடந்துவிட்டது. நானும் ஒரு மனிதன் தானே.. பதற்றமான சூழல், மீண்டும் நானும் அங்கே சென்று இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்..
5 பிரசார இடங்களுக்கு சென்று இருக்கிறேன். அங்கு எல்லாம் ஒன்னுமே நடக்கல.. ஆனால் கரூரில் மட்டும் இப்படி நடக்குது.. இது எல்லாம் மக்களுக்கு தெரியும்.. மக்கள் எல்லாத்தையும் பார்த்துகொண்டு தான் இருக்காங்க..
சிஎம் சார் உங்களுக்கு எதாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க.. என் வீட்டிலேயோ அல்லது ஆபிசிலயோ தான் இருப்பேன்.. என் தொண்டர்கள் மக்களை மட்டும் எதுவும் பண்ணாதீங்க.. எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications