பெண்கள் + திருநங்கைகள் + டெலிவரி ஊழியர்கள்.. ஸ்டாலின் வெளியிட்ட முத்தான 3 அறிவிப்பு! ரொம்ப முக்கியம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் 3 முக்கியமான அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். முக்கியமாக பெண்கள், இளைஞர்கள் பலன் பெறும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தி பேசினார். இதில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அறிவிப்பு 1 - அதன்படி ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 1லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
அறிவிப்பு 2 - ஸ்விக்கி, ஓலா, ஜொமோட்டோ போன்ற சர்வீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கு என விரைவுச் சேவை நல வாரியம் அமைக்கப்படுகிறது. அவர்கள் வாழ்க்கை மற்றும் பணிகள் முக்கியமானது. அவர்களை காக்கும் விதமாக இந்த நல வாரியம் அமைக்கப்படும்.
அறிவிப்பு 3 - விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் உரை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தி பேசினார். இந்த 77 வது சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு தகை சால் விருது வழங்கி சிறப்பித்தார்.
சென்னை கோட்டை கொத்தளத்திற்கு மிகுந்த பாதுகாப்புடன் வருகை தந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து சென்னை கோட்டையில் 3-வது முறையாக தேசியக் கொடியேற்றினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், முதல்வராக 3-வது முறையாக நான் தேசியக் கொடி ஏற்றி வைத்துள்ளேன். 400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுவதில் பெருமை அடைகிறேன்.
கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். இந்திய நாட்டின் முக்கிய அங்கம் தமிழ்நாடு. குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அவ்வாறு செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும். விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடுதான் விடுதலை போராட்டத்திற்கான விதையை முதலில் விதைத்தது என்று பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications