சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‛இது தவறு.. இப்படி செய்யக்கூடாது’.. சட்டென காலில் விழுந்த பெண்ணிடம் கனிவாய் கூறிய முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் காலில் பெண் விழுந்த நிலையில், ‛இது தவறு. இப்படி செய்யக்கூடாது' என முதல்வர் ஸ்டாலின் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறிய வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி பெய்து வருகிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மழை பெய்ததில் சென்னை, சென்னை புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பாதிப்பை ஆய்வு செய்தார்.

மழை பாதிப்பு: மயிலாடுதுறையின் 2 தாலுகாவில் குடும்ப அட்டைக்கு ரூ1,000 நிவாரணம்- முதல்வர் ஸ்டாலின் மழை பாதிப்பு: மயிலாடுதுறையின் 2 தாலுகாவில் குடும்ப அட்டைக்கு ரூ1,000 நிவாரணம்- முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

அதன்படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஸ்டாலின் பார்வையிட்டார். வயல் பகுதிகளுக்கும் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டார். மேலும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார். வீடு, கால்நடையை இழந்தோருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. மேலம் வேஷ்டி, புடவை அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது.

ரூ.1000 வழங்க உத்தரவு

ரூ.1000 வழங்க உத்தரவு

அதன்பிறகு மயிலாடுதுறை மாவட்டம் சிதம்பரம் வல்லம்படுகைக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்த படங்களை ஸ்டாலின் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதோடு தற்காலிக முகாம்களில் பார்வையிட்டார். மேலும் சீர்க்காழி பகுதியில் ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். அதன்பிறகு அவர் சென்னை திரும்பினார். இதற்கிடையே தான் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொவருக்கு ரூ.1000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சிதம்பரத்தில் ஸ்டாலின்

சிதம்பரத்தில் ஸ்டாலின்

முன்னதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுத்தார். இந்த வேளையில் அவரை பார்த்து கோரிக்கை மனுக்கள் வழங்க ஏராளமானவர்கள் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டிருந்தனர். குறிப்பாக பல்கலைக்கழ தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு அளிக்க காத்திருந்தனர். ஓய்வுக்கு பிறகு ஸ்டாலின் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே வந்தார்.

காலில் விழுந்த பெண்-ஸ்டாலின் அறிவுரை

காலில் விழுந்த பெண்-ஸ்டாலின் அறிவுரை

அப்போது பெண் ஒருவர் அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மேலும் திடீரென்று அவர் ஸ்டாலின் காலில் விழுந்தார் இதனை சற்றும் எதிர்பாராத முதல்வர் ஸ்டாலின் லேசாக பின்நோக்கி நகர்ந்தார். மேலும், காலில் விழுவது தவறு. இப்படி செய்யக்கூடாது'' என ஸ்டாலின் அறிவுரை கூறினார். அதோடு கோரிக்கை பற்றி பரிசீலனை செய்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அவர் கூறினார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் காலில், பெண் விழும் வீடியோவும், ஸ்டாலின் பின்நோக்கி நகர்வது தொடர்பான வீடியோவும் இணையதளத்தில் பரவி வருகிறது.

English summary
While insisting on the demand, the woman fell at Chief Minister Stalin's feet and said, This is wrong. A video in which Chief Minister Stalin advised the woman not to do this is currently circulating on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X