நாங்க கட்சியை விட்டு போகணுமா? வார்த்தைகளை கொட்டிய துரைமுருகன்.. அவசரமாக அழைத்த ஸ்டாலின்.. என்னாச்சு?
சென்னை:முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன், அவரை சந்தித்து தனது ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார் துரைமுருகன். சென்னை விமான நிலையத்தில், துரைமுருகன் - ரஜினி பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டியளித்திருந்தார் ஸ்டாலின். ஆனால், அதற்கு முன் தினம் ஸ்டாலினை சந்தித்தார் துரைமுருகன்.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது திமுகவில் குட்டையை குழப்பி உள்ளது. அதில், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.

சீனியர்கள்: ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை. எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.
இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினர். ரஜினிகாந்த், "ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், "பல்லு விழுந்த நடிகர்கள்" என்று கோபமாக கூறினார்.
பஞ்சாயத்து: இந்த பஞ்சாயத்து முடிந்தாலும், தன்னை சந்திக்க வரும் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் பேசும் போது அந்த கோபம் வெளிப்படுகிறது என்கிறார்கள். இதற்கிடையே, வேலூரில் இருந்து சென்னை வந்த துரை முருகன், ஸ்டாலினை சந்தித்தார். அதாவது, வேலூரில் ரஜினிக்கு எதிராக அவரை விமர்சித்த துரைமுருகனை தொடர்புகொண்டு பேசிய ஸ்டாலின், ரஜினியை இந்த அளவுக்கு விமர்சித்திருக்கக்கூடாது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
அதற்கு துரைமுருகன், பல விசயங்களைப் பேச, அதிலுள்ள உண்மைகளைப் புரிந்துகொண்ட ஸ்டாலின், சென்னைக்கு நீங்கள் வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதனையடுத்து சென்னைக்கு திரும்பியதும் ஸ்டாலினை சந்தித்துள்ளார் துரைமுருகன். அப்போது, ரஜினி மீதான விமர்சனம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. அதற்கு துரைமுருகன், ரஜினியை இன்றைக்கு நேத்தைக்கு அல்ல ; பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். என்னிடம் மரியாதையாகவும் நட்பாகவும் தான் இருக்கிறார். எ
என்னை பற்றி பேசியதை உரிமையாக எடுத்துக்கொள்கிறேன். அவர் பேசியதை விட, அவர் பேசியதை ஆமோதிக்கும் விதமாக நீங்கள் நடந்து கொண்டதுதான் எனக்கு வலித்தது. அதுவும், உள்கட்சி அரசியலை அவர் பேசியது இன்னும் வலித்தது. பொதுவாக, எனக்குள்ள சந்தேகம் ஒன்னுதான். பொதுமேடையில், யாரையும் புண்படுத்தும் வகையில் பேசக்கூடிய நபர் ரஜினி கிடையாது.
எல்லோரும் போகணுமா?: ஆனால், இந்த விழாவில் அவர் பேசுகிறார். என்னை மட்டும் பேசியிருந்தால் அது உரிமைன்னு எடுத்துக்கொள்கிறேன். அவரோ, என்னை மட்டும் பேசாமல், இங்கு ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள் ; இடத்தை காலி செய்ய மறுக்கிறார்கள்னு சொல்கிறார் எனில், கட்சியின் அனைத்து சீனியர்களும் வெளியேற வேண்டும் என்பதாகத்தானே அர்த்தம்? இந்த அரசியலை அவர் பேசலாமா? கட்சியின் மாவட்ட செயலாளர்களே பேசத் தயங்கும் ஒரு விசயத்தை உரிமையின் பேரில் ரஜினி பேச முடியுமா? சீனியர்கள், அனுபவஸ்தர்கள் இல்லாமல் அரசியல் கட்சியை நடத்திட முடியுமா?
வார்த்தைகளை கொட்டிய துரைமுருகன்: அதனால், அவராக இந்த சர்ச்சையை உருவாக்கவில்லை. வேலு சொல்லித்தான் பேசியிருக்கிறார் ரஜினி. திமுகவின் உள் கட்சி அரசியலை யார் வேண்டு மானாலும் திமுக நிகழ்ச்சியிலேயே பேசலாம்ங்கிற நிலையை ஏற்படுத்தியி ருக்கிறார். அதை முதலில் நீங்கள் விசாரிக்க வேண்டும்'' என்று தனக்கே உரிய பாணியில் வார்த்தைகளை கொட்டியுள்ள துரை முருகன், தன்னை சந்திக்கும் முக்கியஸ்தர்களிடம் இதனை பகிர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். இந்த நிலையில், 27-ந்தேதி கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று ஸ்டாலின் வணங்கினார். அந்த நிகழ்ச்சியை துரை முருகன் புறக்கணித்து விட்டார். மாலையில் ஸ்டாலினிடமிருந்து துரைமுருகனுக்கு ஃபோன். இதனையடுத்து, அவரை அமெரிக்காவுக்கு வழியனுப்ப விமான நிலையத்துக்குச் சென்றார் துரை.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications