அண்ணாமலைக்கே நேரடியாக போன் போட்ட ஸ்டாலின்.. உடனே ஓகே சொன்ன அண்ணாமலை! திடீரென மாறிய டோன்! ஆஹா!
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்கு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னை அழைத்ததாக அண்ணாமலை கூறி உள்ளார்.
வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம்: தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 12 12 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.
அனைவருக்கும் அழைப்பு: இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜிகே வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதால் இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினே, அண்ணாமலையை போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
முதல்வரே போன் செய்து அழைப்பு: இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக என்னை அழைத்திருந்தார். நமது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
முதல்வர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்போடு அழைத்தார். அலுவலகத்திற்கும் அழைப்பிதழ் கொடுத்து அனுப்பி உள்ளார். முதல்வரின் அன்பான அழைப்பை ஏற்று தமிழக பாஜக சார்பில் நானும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்து கொள்கிறோம். மத்திய அரசு இந்த நாணயத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதை தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகவும், கலைஞருக்கு கிடைத்த பெருமையாகவும் நான் பார்க்கிறேன்.
நான் கண்டிப்பாக பங்கேற்பேன் - அண்ணாமலை: எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சித்தாந்த ரீதியாக, கட்சி அடிப்படையில் இருக்கலாம். அது வேறு. ஆனால் மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பில் இருந்தவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கட்டங்களில் உழைத்தவர். எனவே இந்த நிகழ்வில் தமிழக பாஜக கட்டாயம் பங்கேற்கும். எப்படி பெருந்தன்மையோடு ராஜ்நாத் சிங் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிறாரோ, அதே பெருந்தன்மையை தமிழக அரசும் காட்டும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்












Click it and Unblock the Notifications