ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு ஈடுசெய்ய இயலாத இழப்பு! நடிகர் வடிவேலுவுக்கு முதல்வர் ஆறுதல்!
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருப்பதோடு வடிவேலுவுக்கு ஆறுதலும் கூறியிருக்கிறார்.
சினிமா, அரசியலை கடந்து தனிப்பட்ட முறையில் நடிகர் வடிவேலுவுடன் நட்பு பாராட்டி வருபவர் முதல்வர் ஸ்டாலின்.

வடிவேலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த போது முதல் ஆளாக அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி அவருக்கு தைரியம் ஊட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
அதேபோல் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்காக நடிகர் வடிவேலு ஊர் ஊராக வாக்குக் கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றி வந்ததும் திரும்பிப் பார்க்கத் தக்கது.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவுக்கு முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் விவரம் வருமாறு;
''நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.''
''ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications