'உள்ளம் உவகையில் நிறைகிறது' CLAT தேர்வில் சாதித்த மலைவாழ் மாணவரை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: பொது சட்ட நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ள முதல் பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர் பரத் சட்டம் பயின்று அந்த அறிவொளியை இந்த சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு திமுக துணை நின்று வழிநடத்தும் என்று பதிவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத். இவர் CLAT எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பச்சமலைப் பகுதியில் CLAT தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற புதிய சாதனையையும் செய்திருக்கிறார்.

இதுகுறித்து மாணவரின் தந்தை செல்வக்குமார் பேசுகையில், அம்மா இல்லை.. 10 ஆண்டுகளுக்கு முன்பே அம்மா இறந்துவிட்டார். நமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் சட்டம் மட்டுமே முன்னாடி இருக்கிறது. அதனை படித்தால் மக்களுக்கு உதவியாக இருப்பான் என்று உழைத்து படித்த வைத்தேன். இவர் படிப்பு மக்களுக்கு பயன்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர் பரத் பேசுகையில், பச்சமலையில் யாருமே வக்கீலுக்கு படித்தவில்லை. நான்தான் முதல்முறையாக சட்டம் படிக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார். மாணவரின் இந்த பேட்டி வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை பகிர்ந்து ஸ்டாலின் மாணவர் பரத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், உள்ளம் உவகையில் நிறைகிறது.. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் திமுக சட்டத்துறையும், அதன் செயலாளர் என்.ஆர்.இளங்கோவும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி JEE Advanced 2025 தேர்தலில் வெற்றி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தகுதி பெற்றார். அவரது தந்தை கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் கனவை நனவாக்கி ராஜேஸ்வரி சாதித்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், ராஜேஸ்வரியின் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications