Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை.. உயர் அதிகாரிகளுக்கு உத்தரவுடன் பறந்த அறிவுரைகள்..முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனையில் மாவட்ட எஸ்பிக்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற நிலையில் பல்வேறு அறிவுரைகளையும், உத்தரவுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. முதல்வராக முக ஸ்டாலின் உள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த வேளையில் மாநிலத்தின் நிலைமை பற்றி விளக்கமாக கேட்கும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

சட்டம்-ஒழுங்கு தொடர்பான குற்றச்சாட்டு

சட்டம்-ஒழுங்கு தொடர்பான குற்றச்சாட்டு

இந்நிலையில் தான் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக தலைவர்கள் சார்பில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளதாக ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் உரையாற்ற மறுத்தார். இதுவும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி பாஜகவினர் கூறுகையில், கோவை கார் வெடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் திமுக ஆட்சியில் நடந்துள்ளது. இதனால் ஆளுநர் அதனை கூற மறுத்துவிட்டதாக தெரிவித்தனர்.

 முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

இந்நிலையில் தான் இன்று மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநில டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மாவட்ட எஸ்பிக்கள் அனைவரும் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் உத்தரவு

முதல்வர் உத்தரவு

இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் கூறினார். மேலும் கொலை, கொள்ளை, பலாத்காரம், இணையவழி மோசடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார். மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்க்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காவல் துறையில் பல்வேறு நிலைகள் தொடர்பாக நீங்கள் அனைவரும் தெரிவித்த கருத்துகளை கேட்டு கொண்டேன். அவற்றில் நீங்கள் உறுதியளித்தவாறு வரும் நாட்களில் நீங்கள் மட்டுமல்லாமல் உங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து நிலை காவலர்களிடமும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பணியை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

மதநல்லிணக்கத்துடன் இணக்கமாக..

மதநல்லிணக்கத்துடன் இணக்கமாக..

தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்க கூடியவர்கள். மத நல்லிணக்கத்துடன் அனைவரிடமும் இணக்கமாக வாழும் தன்மை கொண்டவர்கள். இந்த சமூக கட்டமைப்பை பத்திரமாக கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் உள்ளது. எந்தவித சிறு பிணக்குகளும் மக்களிடம் ஏற்படாதவாறு காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மிகவும் கவனமாக கடமையாற்ற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

நீதிக்கு செய்யும் பிழை

நீதிக்கு செய்யும் பிழை

மாநில நுண்ணறிவு பிரிவு மற்றும் க்யூ பிரிவில் அனுப்பப்படக்கூடிய முக்கிய தகவல்களை உடனுக்குடன் களவிசாரணை செய்து காவல்துறை தலைமையகத்துடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் காவல்துறை கண்காணிப்பாளர்களும், ஆணையர்களும் செயல்பட வேண்டும். குற்றநபர்கள் மீதான வழக்கை துரிதமாக விசாரித்து குற்ற பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்வதை உறுதி செய்திட வேண்டும். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுதான் சட்டத்தின் வளையத்துக்குள் குற்றவாளிகளை கொண்டுவர வழிவகுக்கும். இதில் தாமதம் என்பது நீதிக்கு செய்யக்கூடிய பிழையாக அமைந்துவிடும். இப்பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் காவல் துறை கண்காணிப்பாளர்கள் களப்பணியில் ஈடுபட வேண்டும். சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும்.

மக்களின் நண்பனாக...

மக்களின் நண்பனாக...

காவல் நிலையங்களுக்கும், துணை காவல் நிலையங்களுக்கும், செக்போஸ்ட்களுக்கும் அடிக்கடி சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கிராம மற்றும் நகர்புற அமைப்புகளுடன் அடிக்கடி கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை கேட்டு மக்களோடு இணைந்து காவல்துறை உண்மையான நண்பனாக செயல்பட வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன். காவல்நிலைய அளவில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்த ஏற்கனவே கூறியிருந்தேன். அதன்படி பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையின் நிலை மற்றும் கைது நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை அனைவரும் கண்காணிக்க வேண்டும். மேலும் ஒரு ஆய்வுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் பின்பற்றப்படாத நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேசமயம் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நியாயம் கிடைக்க...

நியாயம் கிடைக்க...

காவல் நிலையத்துக்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனை காவல்துறை தலைவர் உறுதி செய்திட வேண்டும். இதை தான் எதிர்பார்க்கிறோம். மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இதனை செய்திட வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+