பின்னால் அந்த சத்தம் கேட்ட.. அடுத்த நொடி.. அப்படியே கான்வாயை ஒதுக்க சொன்ன ஸ்டாலின்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் நேற்று திடீரென ஓரமாக ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக முதல்வர்களின் கான்வாய்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படும். முன்னும் பின்னும் சிலருக்கு 12 கார்கள் என்று 24 கார்கள் வரை பயன்படுத்தப்படும்.
சில முதல்வர்கள் முன்னால் 7 கார்கள், பின்னால் 7 கார்கள் என்று 14 கார்களை பயன்படுத்துவார்கள். தமிழ்நாட்டில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் 12 முதல் 15 வாகனங்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

எத்தனை
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய கான்வாயில் 12 வாகனங்களை பயன்படுத்தி வந்தார். அதாவது இவரின் காருக்கு முன் 6 கார் இருக்கும். இவரின் காருக்கு பின்னால் 5 கார் இருக்கும். அவரின் காரையும் சேர்த்து 12 கார் இருக்கும். முதல்வரின் கான்வாய்க்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்று டிராபிக் நிறுத்தப்படும். இது போன்ற கான்வாய் செல்லும் போது மொத்தமாக போக்குவரத்து நிறுத்தப்படும். மற்ற வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு முதல்வரின் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தப்படும்.

வழி ஏற்படுத்தப்படும்
இந்த வாகனங்கள் நெரிசல் குறைவான பகுதிகளில் செல்லும் போது பிரச்சனை இல்லை. முதல்வரின் கான்வாயில் பாதுகாப்பு வாகனங்கள், அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் எல்லாம் சேர்த்து இந்த வாகனங்கள் வரிசையாக செல்லும். சென்னையில் காலை நேரத்தில் கான்வாய் செல்லும் நேரங்களில் சாலையின் மற்ற போக்குவரத்து மூடப்பட்டு மக்கள் காக்க வைக்கப்படுவது வழக்கம் இதனால் பெரிய அளவில் டிராபிக் ஏற்படுத்துவதும் உண்டு. கான்வாய் வருவதற்கு 2 நிமிடங்கள் முன்பும், கான்வாய் கடந்து செல்லும் வரையிலும் டிராபிக் பொதுவாக முடக்கப்படும்.

டிராபிக்
இது பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காரும் இந்த டிராபிக்கில் சிக்கியது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது வாகன எண்ணிக்கையை 12ல் இருந்து 6 ஆக குறைத்தார். அதோடு முதல்வருக்காக வாகனங்களின் டிராபிக் நிறுத்தப்படும் சம்பவங்களும் குறைந்து உள்ளன. இதன் காரணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் கான்வாய்க்கு கொஞ்சம் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வருவதுண்டு. சமீபத்தில் கூட முதல்வரின் கான்வாயை இளைஞர் ஒருவர் ஓவர்டேக் செய்த சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் நேற்று திடீரென ஓரமாக ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி முதல்வரின் கான்வாய் சென்று கொண்டு இருந்த போது திடீரென பின்னால் ஒரு சத்தம் கேட்டது. இதை கேட்டதும் முதல்வரின் உத்தரவின் பெயரில் அவரின் கான்வாய் உடனே ஓரம்கட்டப்பட்டது. பின்னால் வந்தது ஆம்புலன்ஸ் ஆகும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் உடனே வாகனத்தை ஓரம்கட்ட சொல்லி இருக்கிறார். இதையடுத்து தேனம்பாட்டையில் சென்ற முதல்வரின் கான்வாய் அப்படியே ஓரம்கட்டப்பட்டது.. அதன்பின் ஆம்புலன்ஸ் சென்ற பின் முதல்வரின் கான்வாய் செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications