திருமா இங்கே.. கமல் அங்கே.. அப்போ காங்கிரஸ்? லோக்சபா தேர்தலுக்கு ஸ்டாலின் ஆக்சன்! எல்லாம் முடிஞ்சதே
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை சமீபத்தில் முடிந்த நிலையில் திமுக அளவிலான தமிழ்நாடு கூட்டணி ஆலோசனை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இரண்டு பணிகளை செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
'இந்தியாவில் லோக்சபா தேர்தல் இந்த முறை முன்கூட்டியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக ஜனவரி மாதம் அல்லது டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்கூட்டியே தேர்தலை நடத்தினால் இந்திய கூட்டணியை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்க முடியும் என்பதால் பாஜக இந்த திட்டத்தில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை சமீபத்தில் முடிந்த நிலையில் திமுக அளவிலான தமிழ்நாடு கூட்டணி ஆலோசனை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் ஸ்டாலின் பின்வரும் ஆலோசனைகளை செய்யும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கொடுப்பது. யார் யாருக்கு இடம் கொடுப்பது. எங்கே வேட்பாளர்களை நிறுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்படலாம்.

முக்கியமாக கூட்டணியில் இருக்கும் முக்கியமான தலைவர்களுக்கு இப்போதே தேர்தல் பணிகளை செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கூட்டணி ஆய்வு சர்வே: அதன்படி இரண்டு பணிகளை செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். முதல் பணி திமுகவின் இப்போதைய எம்பிக்கள் மதிப்பெண். அவர்களுக்கு மக்களிடம் உள்ள ஆதரவு. மீண்டும் போட்டியிட்டால் வாய்ப்பு கிடைக்குமா என்ற சர்வே.
அதோடு திமுக கூடுதல் தொகுதிகளில் களமிறங்கினால் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குவது என்பது பற்றியும் சர்வே எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பூத் கமிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு: இரண்டாவதாக பூத் கமிட்டி அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் தங்களுக்கு பூத் கமிட்டி வலுவாக உள்ளது என்பதை லிஸ்ட்டாக கொடுக்க வேண்டும்.
பூத் கமிட்டி உள்ள இடங்களில் மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளாராம். இந்த இரண்டு பணிகளையும் முடிக்கும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.
எங்கெங்கே யார் யார் போட்டியிடுவார்கள்?: 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொகுதி ஒன்றும் டிக் அடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை. இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் கமலுக்கு வெற்றி வாய்ப்புகளும் உள்ளன. பாரத் ஜோடோ யாத்திரையிலும் இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக காணப்பட்டார்.
கமல்ஹாசனை தென் சென்னையில் களமிறக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தென்சென்னையில் கமல்ஹாசன் லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுவார். மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் திமுக வேட்பாளராக இவர் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பாக சிவகங்கை கார்த்திக் சிதம்பரத்திற்கும், நாகர்கோவில் விஜய் வசந்த்திற்கும் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மோடி போட்டியிட உள்ளதாக பேச்சு வரும் நிலையில், இஸ்லாமிய கட்சிகளுக்கு பதிலாக இங்கே காங்கிரஸ் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இது போக, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தென்காசி, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு இந்த முறை திமுக களமிறங்கும் என்று பாராளுமன்ற தேர்தல் திமுக என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் சர்வே பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் விரைவில் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications