ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை
சென்னை: 7 தமிழர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் இடம்பெற்றுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

இவர்கள் 7 பேரையும் தமிழக அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முந்தைய அதிமுக அரசு இந்த எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டார். எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர்தான் உண்டு என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துவிட்டார்.
எழுவர் விடுதலை குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் எழுவர் விடுதலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் எழுவர் விடுதலை தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications