டார்கெட் 1.5 கோடி.. திமுகவின் மிக பிரம்மாண்ட பிளான்.. முழுக்க முழுக்க பெண்கள்தான்.. அதிமுகவை வீழ்த்த

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு முன் எதிரணிகள் பிரிந்து கிடப்பது திமுகவிற்கு சாதகமாக மாறும். முக்கியமாக பெண்கள் வாக்குகளை திமுக குறி வைக்கிறது. திமுக பெண்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது, என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

CM Stalin focusing on 1.5 Crore votes of Women in Tamil nadu ahead of Lok Sabha elections 2024

மற்ற கட்சிகளுக்கு 1-2 இடங்களை மட்டுமே கொடுக்கலாம் என்ற திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் ஸ்டாலின் முக்கியமான பிளான் ஒன்றை போட்டுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழ்நாட்டை கவனிக்கவில்லை: அதில், பாஜக தமிழ்நாட்டை கவனிக்கவில்லை. இந்தியா கூட்டணியை உடைக்க தீவிரமாக அவர்கள் பணிகளை செய்கிறார்கள். அப்படி இருக்க தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்க பெரிதாக நினைக்கவில்லை.

கவனம் இல்லை: அவர்கள் இங்கே கவனம் செலுத்தவில்லை. மத்தியில் இருப்பவர்கள் யாரும் அதிமுகவை விமர்சிக்கவில்லை. மாநில பாஜக தலைவர்கள் மட்டுமே அதிமுகவை சீண்டுகிறார்கள். இப்படி இருக்க .. அதிமுக - பாஜக இடையே என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும். பாமக, தேமுதிக இதை எல்லாம் பார்த்துவிட்டுதான் காய் நகர்த்தும். ஒரே வழிதான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தால்தான் கூட்டணி வரும்.

இல்லையென்றால் இப்படியேதான் இழுபறி இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணியில் பிரச்சனை இல்லை. காங்கிரசுக்கு கூட தொகுதி குறைக்க மாட்டார்கள். அதிகமாக கொடுக்க மாட்டார்கள். கடந்த முறை கொடுத்த அதே அளவில் கொடுப்பார்கள். சில இடங்களில் தொகுதிகளை மட்டும் மாற்றுவார்கள். இன்னும் 10 நாட்களில் இந்தியா கூட்டணி முடிவு பற்றிய அறிவிப்பு வரும்.

கடைசி நோக்கம்தான்: தமிழ்நாடு பாஜகவின் கடைசி நோக்கம்தான். கடைசியாக தமிழ்நாட்டை கவனித்துக்கொள்ளலாம் என்று பாஜக நினைக்கிறது. இப்போதைக்கு தமிழ்நாடு பற்றி அவர்கள் நினைக்கவில்லை. ஆனாலும் அதிமுகவை இணைத்துக்கொண்டு பெரிய கூட்டணி அமைக்கவே பாஜக நினைக்கிறது. எல்லோரையும் இணைத்துக்கொண்டு பெரிய கூட்டணி அமைத்து திமுகவிற்கு கடுமையான போட்டி கொடுக்கவே பாஜக நினைக்கிறது.

அதோடு லோக்சபா தேர்தலில் அதிமுக தனியாக நின்றால் தோல்வி அடையும். அது எடப்பாடிக்குத்தான் எதிராக திரும்பும். எடப்பாடி தனியாக வெற்றிபெற முடியவில்லை என்று புகார் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி இருக்க அதிமுகவிற்கு இப்போது பாஜக கூட்டணியும் அவசியமாக இருக்கிறது.

2024 தேர்தலில் செலவு செய்யவும் யோசிக்கிறார் எடப்பாடி. 2026 தேர்தலில் அவர் கவனம் செலுத்துகிறார். ஆனால் மோடி வரும் போது ஏதாவது நடக்கலாம். இந்த மாத இறுதியில் மோடி தமிழ்நாடு வருகிறார். அப்போது கூட்டணி பற்றி எதாவது முடிவு எடுக்கலாம்.

திமுக டார்கெட்; அதிமுக - பாஜக கூட்டணிகள் தனியாக இருந்தால் வாக்குகள் அதிகமாக பிரியும். சீமான் வேறு வாக்குகளை பிரிப்பார். இதனால் திமுகவிற்கு சாதகமாக மாறும். முக்கியமாக பெண்கள் வாக்குகளை திமுக குறி வைக்கிறது. திமுக பெண்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

உரிமை தொகை திட்டம், இலவச பேருந்து பயணம் தொடங்கி புதுமை பெண் திட்டம் வரை பலருக்கு உதவிகளை செய்துள்ளனர். இவர்களை டார்கெட் செய்கின்றனர். இந்த ஒன்றரை கோடி பேரை திமுகவினர் டார்கெட் செய்கின்றனர்., என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+