போலீசுக்கு பயமா? விளாசிய கேஎஸ். அழகிரி.. "பிரதமர் மீது மரியாதை".. திமுகவிற்கு சப்போர்ட்டாக வந்த வைகோ
சென்னை: பிரதமர் மோடியின் இந்த சென்னை வருகையின் போது அவரின் புகைப்படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் முதல் போட்டி நடக்க உள்ளது. இதற்காக சென்னை முழுக்க மாஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மிகவும் பிரம்மாண்டமாக இதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.

அரசு விளம்பரம்
பிரதமர் மோடியின் இந்த சென்னை வருகையின் போது அவரின் புகைப்படம் அரசு விளம்பரங்களில் இடம்பெறாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இல்லை.. வேண்டுமென்றே பிரதமர் படத்தை பயன்படுத்தவில்லை என்று பாஜக குற்றச்சாட்டு வைத்தது. இதற்கு பதிலடியாக சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் போஸ்டர்களில் மோடி படத்தை பாஜக நிர்வாகிகள் சிலர் ஒட்டிய சம்பவங்களும் கூட நடைபெற்றன.

ஐடி விங்
இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களை பின்னர் திமுக ஐடி விங்கும் கூட நீக்கியது. அதோடு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சிலர் இந்த மோடி போஸ்டர்களில் கருப்பு பெயிண்டை அடித்ததும் பெரிய சர்ச்சை ஆனது. இப்படி மோடி படத்தில் கருப்பு பெயிண்ட் பூசிய பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இது பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

கே.எஸ் அழகிரி
அரசு விளம்பரத்தில் அத்துமீறி மோடி படத்தை ஒட்டியவர்களை ஏன் கைது செய்யவில்லை. அரசு விளம்பரத்தில் தான் பாஜகவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று கே.எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

கண்டனம்
இந்த நிலையில் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக மதிமுக பொது செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில், பிரதமர் மோடிக்கு உரிய மரியாதையை முதல்வர் ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார். பிரதமர் மோடி படத்தில் கருப்பு மை பூசிய சம்பவம் எங்காவது ஒரு இடத்தில் நடந்து இருக்கும். இதை வைத்து முன் முடிவுகளை எடுக்க கூடாது. பிரதமருக்கு தர வேண்டிய மரியாதையை முதல்வர் கொடுத்துள்ளார், என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

வைகோ கருத்து
பிரதமர் மோடி புகைப்படத்தை ஒட்டியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பிய நிலையில் திமுக கூட்டணியில் குழப்பமோ என்ற விவாதங்கள் எழ தொடங்கின. இந்த நிலையில்தான் திமுகவிற்கு ஆதரவாக அதன் கூட்டணியில் உள்ள மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் படம் இடம்பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பிரதமர், குடியரசுத் தலைவர் புகைப்படம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications