சிக்சர்! இப்ப வருமோ.. எப்ப வருமோ.. காத்திருந்த டெல்டா மக்களின் மனக்குறையை தீர்த்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : டெல்டா மாவட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்களின் மனக்குமுறலைத் தீர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் டிஆர்பி ராஜாவின் நியமனம் மூலம் இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி மே 11 ஆம் தேதி, காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம் : டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது டி.ஆர்.பி ராஜா அமைச்சராவதன் மூலம் டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் யாருக்குமே அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்ட திமுகவினர் அதிருப்தி அடைந்தனர்.
18ல் 15 : 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர் கிடைக்காதது அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும், கட்சியினருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இத்தனைக்கும், ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளைத் திமுக கூட்டணி கைப்பற்றியது.
கைவிடாத டெல்டா : டெல்டா மாவட்டங்களில் திமுகவின் அமைச்சரவையில் திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி கலைவாணன், பட்டுக்கோட்டை கா.அண்ணாத்துரை ஆகியோரில் சிலர் பெயர்கள் இடம்பெறக்கூடும் எனத் திமுகவினரால் அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவர் பெயர் கூட இடம்பெறாததால் திமுகவினரும், டெல்டா மாவட்ட மக்களும் அதிருப்தி அடைந்தனர்.
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் டெல்டா மாவட்டங்கள், திமுகவை கைகொடுத்துக் காப்பாற்றியுள்ளன. 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவைச் சேர்ந்த 23 பேர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையிலும் கூட திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். ம்றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரும் இந்த முறை அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டது.
டெல்டா அதிருப்திக் குரல் : திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் டெல்டா மாவட்டங்களை அமைச்சரவையில் புறக்கணித்தது சலசலப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் இருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என கவலைப்பட வேண்டாம், உங்கள் மாவட்டத்தில் இருந்து தான் நான் இன்று முதலமைச்சராகி இருக்கிறேன் என சென்டிமென்ட்டாகப் பேசினார்.
எனினும், அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான பேச்சுகள் எழும் போதெல்லாம், டெல்டா மாவட்ட எம்.எல்.ஏக்கள், தங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என நப்பாசையுடன் இருந்து வந்தனர். கடந்த டிசம்பரில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டபோதும் டெல்டாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
குட் நியூஸ் : இந்நிலையில், தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா இடம்பிடித்துள்ளார். மன்னார்குடி தொகுதியில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆன டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பதால் அவர் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அப்போது யோகம் அடிக்கவில்லை.
இந்நிலையில், ஐடி விங் பணிகளை தீவிரப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதன்மூலம், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவின் எதிர்பார்ப்பு இந்த முறை பலித்துள்ளது. திமுகவை எப்போதும் கைவிடாத டெல்டாவுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா? -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ் -
புதுமைப் பெண் திட்டம்! ரூ.1000 லிருந்து ரூ.1500 உயர்த்த திமுக வாக்குறுதி! இப்படி ஒரு சூப்பர் காரணம்? -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications