அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஸ்டாலின் வைக்கும் ‘டெஸ்ட்’.. உடனே சேலஞ்சை ஏற்ற ராஜா! ஃபர்ஸ்ட் வருவாரா?
சென்னை: தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தம்பி டி.ஆர்.பி.ராஜா மிகத் திறமையாக இந்தத் துறையை வழிநடத்தி வருகிறார். அவர் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது அவருக்கு நான் வைக்கக்கூடிய 'டெஸ்ட்' எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் ஜனவரி மாதம் நடத்தவுள்ளது தமிழ்நாடு அரசு. இன்று சென்னையில் நடைபெற்ற "உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024"க்கான முன்னோட்ட அறிமுக விழாவின்போது, இந்த மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து, உரையாற்றினார்.

ஸ்டாலின் பேசுகையில், "அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7, 8ஆம் தேதிகளில், நாம் நடத்த இருக்கின்ற மாபெரும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் பிரம்மாண்டத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. 1996-2001ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான், தமிழ்நாட்டினுடைய தொழில் துறை மாபெரும் புரட்சியை அடைந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேடியும், நாடியும் வந்தது.
இன்று சென்னையைச் சுற்றி காஞ்சிபுரத்துக்கோ - சோழிங்கநல்லூருக்கோ - திருபெரும்புதூருக்கோ - ஒரகடத்துக்கோ நீங்கள் சென்றால், பார்க்கக் கூடிய பல தொழிற்சாலைகள், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவைதான். அப்போது, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை அடைந்தது. இது தொடர்பாக, ஆங்கில வர்த்தக நாளிதழ்கள் முதலமைச்சர் கருணாநிதியைப் பாராட்டி எழுதினார்கள்.
அப்போது இன்னொரு கருத்தையும் சொன்னார்கள். "தமிழ்நாடுதான் முதலிடத்திற்கு வந்திருக்க வேண்டும். நிறுவனங்களை அதிகம் ஈர்த்த தமிழ்நாடு, அதனை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான், இரண்டாம் இடம் வழங்கப்பட்டது" என்று எழுதினார்கள். அதாவது தொழில்களை ஈர்ப்பது மட்டும் முக்கியம் கிடையாது! அப்படிப் பல்வேறு தொழில்களை ஈர்த்திருக்கோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சி மிகுந்த தேவையான ஒன்று. முதலீடுகள் சாதாரணமாக வந்துவிடாது. ஒரு ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் மீது மரியாதை இருக்கவேண்டும். அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். சட்டம், ஒழுங்கு முறையாக இருக்கவேண்டும். இவ்வளவும் இருந்தால்தான் முதலீடுகள் செய்ய முன்வாருவார்கள்.
2021-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது என்றால், இந்த மாற்றங்களின் காரணமாகத்தான். தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தம்பி டி.ஆர்.பி. ராஜா மிகத் திறமையாக இந்தத் துறையை வழிநடத்தி வருகிறார். அவர் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது அவருக்கு நான் வைக்கக்கூடிய டெஸ்ட்.
எந்த டெஸ்ட் வைத்தாலும், அவர் "ஃபர்ஸ்ட்" வருவார். அத்தகைய வேகம் கொண்டவர் அவர். செயல்தான் சிறந்த சொல் என நம்புகிறவன் நான். தொழில்துறையும் அப்படியே செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய செயல்கள் நமக்காக பேசும்படி நீங்கள் உங்கள் சாதனைகளை தொடரவேண்டும்." எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "முதல்வர் சொல்லிவிட்டால் தட்டாமல் செய்வதுதான் எங்கள் கடமை. முதல்வர் ஸ்டாலின் எனக்கு மட்டுமல்ல அமைச்சர்களுக்கு தினந்தோறும் டெஸ்ட் வைத்துக் கொண்டிருக்கிறார். எல்லோரும் 100க்கு 100 மார்க் எடுக்கவேண்டும் என விரும்புகிறார். நிச்சயமாக அவர் வைத்திருக்கும் டெஸ்ட்டில் ஜெயித்துக் காட்டுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!












Click it and Unblock the Notifications