எடப்பாடியுடன் விமானத்தில் சிரித்து சிரித்து பேசிய டாப் அதிகாரி! ஸ்டாலினுக்கு போன உளவுத்துறை வார்னிங்
சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம். அதிகாரி ஒருவரை பற்றிய முக்கியமான உளவுத்துறை ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதாம்.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சம்பவம் நடந்து உள்ளது. சென்னையில் சேலம் நோக்கி சென்ற விமானத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார். அதே விமானத்தில் ஒரு திமுக எம்எல்ஏ இருந்துள்ளார். அதேபோல் ஒரு உயர் அதிகாரி இருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த அதிகாரி எடப்பாடி பழனிசாமியிடம் பேசி உள்ளார். அதில்.. ஸ்டாலினின் உடல்நிலை பற்றி மட்டும் பேசாமல்.. அடுத்த தேர்தல்.. அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் தேர்தல் வாய்ப்புகள் பற்றியும் பேசி உள்ளனர்.
உயர் அதிகாரியான அவரை சமீபத்தில்தான் ஸ்டாலின் தேர்வு செய்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த அதிகாரி.. எடப்பாடியிடம் நட்பாக பேசி உள்ளார். அதோடு ஆட்சி மாற்றம் குறித்தும் இவர் பேசியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: இதை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகவல் சென்றுள்ளது. அவர் டென்ஷனாகி இதை பற்றி உளவுத்துறையிடம் விசாரித்துள்ளார். இதை அப்படியே முதல்வர் ஸ்டாலினிடம் பகிர்ந்து உள்ளார். இதை கேட்டு டென்சன் ஆன முதல்வர் ஸ்டாலின்.. சென்னை வந்ததும் விசாரிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நான் அமெரிக்கா சென்றாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணி த்துக் கொண்டுதான் இருப்பேன். எனது முழு கவனமும் தமிழகத்தில்தான் இருக்கும். அதேபோல, உங்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்காணித்தபடி இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்; கவனமாக இருங்கள் என்றெல்லாம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை எச்சரித்தார் ஸ்டாலின்.
இதுகுறித்து மாநில உளவுத்துறைக்கும் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், தமிழகத்தில் நடக்கும் அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் உள்ள முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது உளவுத்துறை. உயரதிகாரிகளிடம் நேற்று பேசிய முதல்வர் தரப்பு, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார்கள் ? என்ன செய்கிறார்கள் ? என விசாரித்துள்ளது.
ஸ்பெஷல் கேள்வி: அமைச்சர்களின் தினசரி செயல்பாடுகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனை பற்றி ஸ்பெஷலாக கேட்டிருக்கிறது மேலிடம். அதேபோல, சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை கைது செய்வதா? தவிர்ப்பதா? என்று முதல்வர் தரப்பிடம் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். கேபினெட் கூட்டத்தில் எச்சரிக்கை செய்தது போல, அமைச்சர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனித்து வருகிறார் ஸ்டாலின் என்பதே திமுகவில் பேசப்படும் சீக்ரெட் டாபிக்.
யார் அதிகாரம்: முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அமைச்சரவை மாற்றம் இல்லை: தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாற்றம்தான் செய்யப்படவில்லை. அவர் திரும்பி வந்த பின் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications