உதயநிதிக்காக 'பில்டப்’ நடக்கிறது.. முதல்வருக்கு ஆட்சியில் கவனம் இல்லை.. அண்ணாமலை அட்டாக்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கவனம் முழுவதும் ஆட்சியில் இல்லை. அவர் மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக கொண்டுவந்து.. முதல்வராக கொண்டு வரவேண்டும் என்பதில் தான் இருக்கிறது என்றும் அதற்கான உதயநிதிக்கு பில்டப் நடக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
சென்னையில் பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறியதாவது:- முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு 4 விஷயத்தை ப்ராசஸ் செய்து உண்மையை சொல்லக்கூடிய திறன் இருக்கிறதா? குடும்ப ஆட்சி என்பது மொத்தமாக தமிழகத்தை சீரழிக்கும். சிஸ்டம் முழுவதும் கெட்டுப்போய்விடும். மாநிலத்தின் ஆட்சியில் இருந்து ஆரம்பித்து மேயர் ஆட்சியில் உள்ளே வந்து முழுவதுமாக சிஸ்டத்தை கெடுத்து தமிழ்நாட்டை குட்டிசுவராக்கி வைத்திருக்கிறார்கள்.

தென் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது திருநெல்வேலி மேயர் எங்கே இருந்தார் தெரியுமா? சேலம் மாநாட்டிற்காக பந்தல் போட்டுக்கொண்டிருந்தார். திருநெல்வேலியில் யாரும் இல்லை. சரி மழை வந்துவிட்டது. பார்வையிட யார் போகவேண்டும்.. அமைச்சர் கேன் என் நேருவும், துரைமுருகனும் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அங்கு போகவில்லை. உதயநிதி ஸ்டாலின் போய் பார்க்கிறார். முதல்வர் ஸ்டாலின் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்.
சேலம் இளைஞரணி மாநாடு முடிவத்ற்கு முன்போ அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்போ உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கு.. எப்படி ஒரு சினிமாவில் ஹீரோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடி.. பட்டாசை வெடித்து.. சூவை காட்டி.. பேண்டை காட்டி.. சட்டையை காட்டி.. அப்புறம் பட்டனை காட்டி.. அதற்கு பிறகு முகத்தை காட்டுகிறமாதிரி உதயநிதி ஸ்டாலினுக்கான பில்டப் திருவிழா நடக்கிறது.

முதல்வர் ஸ்டாலினின் கவனம் முழுவதும் ஆட்சியில் இல்லை. அவர் மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக கொண்டுவந்து.. முதல்வராக கொண்டு வரவேண்டும் என்பது தான்.. இந்தியாவின் மிக முக்கியமான நகரான சென்னை நம் கண் முன்னே அழிகிறது. 2026 தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications