Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 நாள்களில் பறந்த உத்தரவு - முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாணவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் போகும் ஊர்களில் எல்லாம் மக்கள் குறைகளை மனுக்களாகப் பெற்றுவருகிறார். அப்படிப் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறார்.

நேரடியாக அவரது பார்வைக்கு வரும் மனுக்கள் மீது மின்னல் வேக நடவடிக்கை என்பது பலரையும் இந்த ஆட்சி நிர்வாகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை மாணவி இராஜேஸ்வரி புகழேந்திக்கு அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

CM Stalin has taken action within 10 days on the complaint filed by a student

கடந்த சில வாரங்கள் முன்னதாக திருச்சிக்குத் தொகுதியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளைப் பார்வையிடுவதற்காக களப்பணி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவரிடம் திருச்சி சங்கலியாண்டபுரம் பகுதியில் வசித்துவரும் மாணவி இராஜேஸ்வரியின் தாய் சுந்தரவல்லி புகழேந்தி ஒரு மனுவை நேரில் வழங்கி இருந்தார்.

தனது மகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பில் சேர்வதற்காக முதல் வருடக் கட்டணமான முழுத் தொகையைக் கட்டி இருந்தார். ஆனால், அந்தப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக வேறு கல்லூரியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் காலம் கடந்தநிலையில், இன்னும் அந்தத் தொகை திருப்பி அளிக்கப்படவில்லை.

CM Stalin has taken action within 10 days on the complaint filed by a student

காலதாமதம் ஏற்பட்டுவருகிறது. இதனால் எங்கள் மகளின் படிப்பை மேற்கொண்டு தொடர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு மனுவில் கூறி இருந்தார்.

அந்த மனுமீது உடனடியாக நடவடிக்கையை எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இன்று அந்த மாணவி உட்பட அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய பத்து பேருக்கு அவர்கள் கட்டிய பணம் போய்ச் சேர்ந்துள்ளது. அதுவும் பத்தே நாள்களில்.

CM Stalin has taken action within 10 days on the complaint filed by a student

ஆகவே மிகுந்த மகிழ்ச்சியுள்ளது மாணவி இராஜேஸ்வரியின் குடும்பம். உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக இராஜேஸ்வரியும் முதல்வருக்கு நன்றி கடிதத்தை நேரில் அளித்துள்ளார். அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த நன்றி கடிதத்திற்காக அம்மாணவியைத் தொலைபேசியில் அழைத்து முதல்வர் பாராட்டியும் உள்ளார்.

நாம் அந்தப் பயனாளி மாணவி இராஜேஸ்வரியிடம் பேசினோம். அவர், "நான் கடந்த கல்வியாண்டில் பட்டப்படிப்புக்காகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின் வேறு படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசித்து, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பினை தேர்ந்தெடுத்து அங்குச் சேர்ந்துவிட்டேன்.

CM Stalin has taken action within 10 days on the complaint filed by a student

முதல் ஆண்டுக்கான முழுத் தொகையையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கட்டி இருந்தேன். அந்தத் தொகையை மீண்டும் அளிக்குமாறு பலமுறை நிர்வாகத்தினரிடம் முறையிட்டேன். ஆனால், வழங்கப்படவில்லை. அதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

ஆகவே, திருச்சி வந்த முதல்வரிடம் எனது தாயார் மனு அளித்திருந்தார். இது கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. நாங்கள் மனு அளித்த பத்தே நாள்களில் பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து அழைப்பு வந்தது. முதல்வரிடம் மனு அளித்தீர்களா என விசாரித்தனர். ஆம் என்றேன். உடனடியாக முழுத் தொகையையும் திருப்பி அளித்துவிட்டனர். என்னைப் போல சுமார் 15 மாணவர்களுக்குக் கட்டிய தொகை திரும்பக் கிடைத்துள்ளது" என்கிறார்.

அவரைத் தொடர்ந்து அவரது தந்தையிடம் பேசினோம், அவர், "முதல்வராகப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து ஸ்டாலின் நிறையத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதனால்தான் நாங்களும் அவரிடம் முறையிடலாம் என மனு அளித்தோம். என் மனைவிதான் அளித்தார். அவரது அதிரடியான நடவடிக்கையால் பணம் மீண்டும் கிடைத்துள்ளது.

CM Stalin has taken action within 10 days on the complaint filed by a student

அந்தத் தொகையை அப்படியே என் மகள் இரண்டாம் கல்வியாண்டுக்கான கட்டணமாகச் செலுத்திவிட்டேன். இந்தத் தொகை வரவில்லை என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு இருப்போம்.

இதில் எங்கள் முயற்சியால் பல பிள்ளைகளும் பயன்பெற்றுள்ளனர். அதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார்.

CM Stalin has taken action within 10 days on the complaint filed by a student

இதற்கு முன்பாக இவர் தங்கள் ஊர் பைபாஸ் சாலையின் வழியே பயணிக்கும் பேருந்துகள் குறிப்பிட்ட இடத்தில் பயணிகளை இறக்கிவிடுவதில்லை. ஆகவே பாதிக்கப்படுகிறோம் என மனு அளித்துள்ளார். அந்தக் கோரிகையும் நடைமுறைப்படுத்த அதிரடியாக முதல்வர் உத்தரவு இட்டுள்ளார்.

எந்த முனையிலிருந்து தனது பார்வைக்கு ஒரு மனு வந்தாலும் அந்த மனுவுக்கான ஆக்ஷன் மின்னல் வேகத்தில் எடுக்கப்படுகிறது. இந்த மாற்றம் இதுவரை தமிழ்நாடு பார்க்காத மாபெரும் மாற்றம் மட்டும் அல்ல; மகிழ்ச்சியான மாற்றம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+