கவனமாக பாருங்க! ஸ்டாலின் கைக்கு போன உளவு ரிப்போர்ட்.. 13 தொகுதிகள் கடைசி அஸ்திரத்தை எடுத்த திமுக
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக 13 லோக்சபா தொகுதிகளில் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. கடைசி நாள் பிரச்சாரத்தில் இந்த 13 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த திமுக முடிவு செய்துள்ளதாம்.
இன்று மட்டுமே தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியும். இதனால் கடைசி கட்ட பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இன்று மாலையோடு பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன.

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் திமுக: இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஆளும் திமுக 13 லோக்சபா தொகுதிகளில் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. கடைசி நாள் பிரச்சாரத்தில் இந்த 13 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த திமுக முடிவு செய்துள்ளதாம்.
திமுகவின் உட்கட்சி சர்வே, பிரச்சார பார்வையாளர்களின் ஆய்வுகள் மற்றும் மாநில உளவுத்துறையின் ரிப்போர்ட் ஆகியவை காரணமாக இந்த பிரச்சாரத்தை திமுக தீவிரப்படுத்தி உள்ளது.இந்த தொகுதிகளில் கட்சி முன்பு மதிப்பிட்டதை விட போட்டி கடுமையாக இருக்கும் என்று ரிப்போர்ட் சென்றுள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ளது.. ஆனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
திருச்சி, திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளின் தீவிர பிரசாரம் பெரும் சவாலாக உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.. ஆனால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் கடைசி நாள் பிரச்சாரத்தை இன்னும் தீவிரமாக்க வேண்டும் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்த கடைசி கட்ட முயற்சிகளை எடுக்க கட்சி நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாம். இங்கே எல்லாம் வீடு வீடாக போங்க. ஒரு வாக்காளர் பட்டியலில் ஒரு பக்கத்தில் உள்ள 50 சதவிகிதம் பேருக்கு மேல் நமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.
முதலில் அதிமுக, பாஜக வாக்குகள் பிரியும் என்று நினைத்தோம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. அதிமுக நன்றாக பிரச்சாரம் செய்கிறது. பாஜக பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் எதிர்க்கட்சி வாக்குகள் பாஜகவிற்கு பிரியாது. அதிமுகவிடம் குவிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் சில இடங்களில் போட்டி கடுமையாகும்.
திருச்சி, திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக பிரச்சாரம் சுணங்கி விட்டது. இதனால் இங்கே எதிர்க்கட்சி வாக்குகள் பிரியாது. ஆகையால் இங்கே அதிமுக கை லேசாக ஓங்க தொடங்கி உள்ளது என்றுதான் உட்கட்சி சர்வே மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
இதன் காரணமாகவே இந்த தொகுதிகளில் கடைசி நாள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திமுக முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications