கொடைக்கானலில் எகிறிய "சூடு".. ஸ்டாலின் உருவாக்கிய லிஸ்ட்.. மாட்ட போகும் அந்த தலைகள்.. அடடா ட்விஸ்ட்
சென்னை: கொடைக்கானல் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து முக்கியமான லிஸ்ட் ஒன்றை தயார் செய்து வருவதாக ஆளும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பின் வரும் ரிப்போர்ட்டுகள் சென்றுள்ளன.

1. லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு 40 இடங்களிலும் வெற்றி கிடைக்கும். பாஜக வெற்றிக்கு வாய்ப்பே இல்லை.
2. சில இடங்களில் வெற்றி சதவிகிதம் குறைவாக இருக்கும். வெற்றி சதவிகித வாக்குகள் சில இடங்களில் குறைவாக இருக்கும். ஆனால் வெற்றி உறுதி.
3. கோவையில் அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அங்கே செந்தில் பாலாஜி பேக்டர் தொடர்ந்து சிறப்பாக உதவி உள்ளது.
4. நெல்லையில் மட்டும் பாஜகவிற்கு சாதகமான நிலை இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் பாஜகவிற்கு தேர்தலில் சுணக்கம் ஏற்பட்டது. தலைமை சப்போர்ட் இல்லாததால் நெல்லையிலும் பாஜக சறுக்கியது.
5. தென் தமிழ்நாட்டில் நாடார்கள் சப்போர்ட் குறைவாக இருந்துள்ளது. அடுத்த முறை நாடார் வேட்பாளர்களை அதிக அளவில் களமிறக்க வேண்டும். இல்லையென்றால் திமுகவிற்கு எதிராக மாறும் வாய்ப்புகள் உள்ளன, என்று ரிப்போர்ட் சென்றுள்ளது.
ஸ்டாலின் ஆலோசனை: இந்த நிலையில்தான் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் பணிகள் காரணமாக தொடர்ந்து களத்தில் இருந்தவர் தற்போது ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார்.
கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிளான் மாற்றம்; முதலில் கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின்.
கடந்த 5 நாட்களாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து சற்று விடுபடுவதற்காகவும், பிஸியான செட்யூல்டிலிருந்து ஓய்வு எடுக்கவும் மாலத்தீவுக்கு குடும்பத்தினருடன் சென்று வர வேண்டுமென ஸ்டாலினிடம் உதயநிதி பேசியிருக்கிறார்.
குடும்பத்தினரும் அதனை விரும்பியுள்ளனர். இதனை அடுத்து திங்கள் கிழமை கிளம்பி மே மாதம் 5 - ந்தேதி சென்னை திரும்புவதற்கேற்ப ஸ்டாலின் குடும்பத்தினர் ப்ரோக்ராம் போட்டுள்ளனர். ஸ்டாலினும் இதற்கு சம்மதித்தாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், 1 வாரம் மாலத்தீவு செல்கிறார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
பிளான் மாற்றம்: ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஸ்டாலின் ஒப்புக்கொண்டாலும், அடுத்தடுத்த ஆலோசனையில் மாலத்தீவு ப்ரோக்ராம் வேண்டாம் என சொல்லி விட்டார். அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை ஸ்டாலின் எடுத்திருக்கிறார். இதனையடுத்தே கொடைக்கானல் சென்று ஒரு வாரம் ஓய்வெடித்து வரலாம் என திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் ஆலோசனை; இந்த நிலையில்தான் கொடைக்கானலில் இருந்தபடி ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றை தயார் செய்து வருகிறாராம்.
அதில், சிறப்பாக செயலாற்றிய அமைச்சர்கள், சிறப்பாக செயலாற்றிய மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் லிஸ்டை எடுத்துள்ளார்.
அதோடு இல்லாமல் மோசமாக செயலாற்றிய அமைச்சர்கள், மோசமாக செயலாற்றிய மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் லிஸ்டை எடுத்துள்ளார்.
இதில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு ப்ரோமோஷன், கட்சி ரீதியாக சிறப்பு பொறுப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். அமைச்சரவை மாற்றம் இருக்காது ஆனால் கண்டிப்பாக 2-3 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்பட்டு உள்ளதாம். இதற்கான லிஸ்டைதான் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக தயார் செய்து வருகிறாராம்.
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குளிர்ச்சியாக இருந்தாலும் அங்கு உருவாகும் லிஸ்ட் காரணமாக திமுகவினர் இடையே சூடு கூடி உள்ளதாம்.












Click it and Unblock the Notifications