வேலூரில் மினி டைடல் பார்க்.. காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்
வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள்தான் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
சென்னை: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு விரிவுபடுத்தும் முயற்சியாக வேலூரில் அமைய உள்ள மினி டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழ்நாட்டில் வேலூர், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் இந்த டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதனை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சென்னை டைடல் பார்க்குடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக செயல்படுத்தும். இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் தொடங்க இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில் அப்துல்லாபுரம் மற்றும் மௌனவூர் பகுதியில் இந்த பூங்கா அமைய இருக்கிறது. ரூ.70 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்தவாறு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். ஏற்கெனவே வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் மூலம் ஓரளவு வேலை வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது உருவாக்கப்படும் இந்த மினி டைடல் பார்க் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications