ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. எம்பி, எம்எல்ஏக்களும் பங்கேற்பு. ஆலோசிப்பது என்ன?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. காணொலி காட்சி மூலம் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பொருளில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.பி, எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவ்வப்போது மாவட்ட செயலாளர்களுடம் நேருக்கு நேர் காணொலி காட்சி மூலமாக பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். 'என் வாக்குச் சாவடி - வெற்றி வாக்குச் சாவடி' என்ற தலைப்பில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது.
அப்போது காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடந்து வரும் நிலையில் யாருக்கும் ஓட்டுரிமை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதை கண்காணிக்க நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார்.
மேலும் எஸ்.ஐ.ஆர் பணிகளை பொறுத்தவரை தற்போது பாதி கிணறை தான் தாண்டியிருக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் இன்னும் தீவிரமாக திமுகவினர் பணியாற்ற வேண்டும். இவ்வாறு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications