Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலெக்டர்கள், எஸ்.பிக்கள் உடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. கள்ளச்சாராய மரண விவகாரத்தை தொடர்ந்து அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டு இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். எண்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

kallakurichi mk stalin illicit liquor

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியனவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 17 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை தற்போது 51 ஆக அதிகரித்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த வழக்கை, சிபிசிஐடி வசம், தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளச்சாராய விற்பனை புகாரில், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய பலி குறித்து அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் விஷச்சாராயம், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை வழங்கி உள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தீவிர ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளார். இந்த விசாரணை ஆணையம் பணிகளைத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டிஜிபி, உள்துறை செயலர் ஆகியோர் விரிவான அறிக்கையும் அளிக்க உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+