மாலத்தீவு வேண்டாம்.. நோ சொன்ன ஸ்டாலின்.. திடீரென மாறிய பிளான்.. தேர்தல் முடிந்ததும் புதிய முடிவு
சென்னை: அயராத தேர்தல் பணியால் ஓய்வு எடுக்கமுடியாமல் இருந்த முதல்வர் ஸ்டாலினிடம், கோடையை கழிக்க மாலத்தீவு சென்று வரலாம் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர். உதயநிதியும் இதை ஆமோதித்தார்.
கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின்.

கடந்த 5 நாட்களாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து சற்று விடுபடுவதற்காகவும், பிஸியான செட்யூல்டிலிருந்து ஓய்வு எடுக்கவும் மாலத்தீவுக்கு குடும்பத்தினருடன் சென்று வர வேண்டுமென ஸ்டாலினிடம் உதயநிதி பேசியிருக்கிறார்.
குடும்பத்தினரும் அதனை விரும்பியுள்ளனர். இதனை அடுத்து திங்கள் கிழமை கிளம்பி மே மாதம் 5 - ந்தேதி சென்னை திரும்புவதற்கேற்ப ஸ்டாலின் குடும்பத்தினர் ப்ரோக்ராம் போட்டுள்ளனர். ஸ்டாலினும் இதற்கு சம்மதித்தாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், 1 வாரம் மாலத்தீவு செல்கிறார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
பிளான் மாற்றம்: ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஸ்டாலின் ஒப்புக்கொண்டாலும், அடுத்தடுத்த ஆலோசனையில் மாலத்தீவு ப்ரோக்ராம் வேண்டாம் என சொல்லி விட்டார். இதனையடுத்தே கொடைக்கானல் சென்று ஒரு வாரம் ஓய்வெடித்து வரலாம் என திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாலத்தீவு செல்லலாம் என தீர்மாணிக்கப்பட்ட திங்கள் கிழமை அன்று ( 29 ஆம் தேதி) கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார் ஸ்டாலின். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு செல்ல முடிவாகியுள்ளது.
கொடைக்கானலில் ஏப்ரல் 29 முதல் மே 4-ந்தேதி வரை குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுக்கிறார். இங்கிருந்தபடியே அரசு பணிகளையும் கவனிப்பார் என சொல்லப்படுகிறது.
முதல்வரின் வருகையை ஒட்டி, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, மாவட்ட காவல் துறை எஸ்.பி. பிரதீப் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதே சமயம், திங்கள் கிழமை காலை 9.45 மணியளவில் சென்னையிலிருந்து மதுரை வருவதால் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதிகாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டுள்ளது.
வடஇந்தியா பிரச்சாரம்: இவர் 1 வாரம் விடுமுறையை கழித்த பின் மீண்டும் தமிழ்நாடு வந்து அதன்பின் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவார். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மே 2ம் வாரம் அவர் வடஇந்தியாவில் பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கலாம் என்கிறார்கள். அதற்கு முன் இவர் வடஇந்திய பயணத்தை முடித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
வடஇந்தியாவில் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு பிரச்சாரம் செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications