தலைகீழாக மாறும் வடசென்னை! 1000 கோடி புராஜெட் ரெடி… ஸ்டாலின் பளான் செம ஸ்மார்ட்..
சென்னை: இன்றுவரை பலருக்குச் சென்னை என்றால் அது எழும்பூர் வரைதான். அதைத் தாண்டி வடசென்னை என்றால் அப்படியே மயங்கிப்போய் நின்று விடுவார்கள்.
ஹைஃபை ஆன வசதிகள் நிறைந்த பெசன்ட் நகர் கடற்கரையை விரும்பிப் போகும் சென்னைவாசிகள் அப்படியே காசிமேடு பக்கம் வாருங்கள் என்று அழைப்பு கொடுத்தால் ஆடிப் போய்விடுவார்கள்.

அந்தளவு வசதிகள் குறைந்த பகுதியாகக் கருதப்படும் வடசென்னை. தமிழ்த் திரைப்படங்களிலும் சென்னையைப் பற்றிய சித்தரிப்புகள் நல்ல விதமாக இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணம்.
அந்தப் பகுதி மக்களைப் பற்றி எதிர்மறையான ஒரு தோற்றத்தை சினிமா உலகம் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதை உண்மை என நம்பி, மக்கள் பல அந்தப் பகுதி மக்களை அச்சம் தரும் ஆட்களாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

அந்தத் தோற்றத்தை முழுமையாக உடைத்தெறியும் வேலையில் இறங்கி உள்ளது திராவிட மாடல் அரசு. இதற்காக வடசென்னையில் ரூ 1000 கோடி மதிப்பில் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் வடசென்னை மக்களின் வாழ்வில் புதிய கலாச்சார மேம்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.

வடசென்னையை மையமாகக் கொண்டு புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சமூக நலக்கூடம் என நவீன வசதிகளை ஏற்படுத்தித் தர, சிஎம்டிஏ நிர்வாகம் மூலம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு.

இதற்கான அதிகாரிகள் மூலம் ஆய்வுகளை நடத்தி, திரு.வி.க நகர் உள்ளிட்ட மொத்தம் 6 பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்தவும், அதிகம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களைக் கண்டறிந்து மேம்பாலங்களைக் கட்டவும், இளைஞர்கள் பயன்பெறும் விதம் விளையாட்டு மைதானங்களை உருவாக்கவும் திட்டங்கள் கூர்தீட்டப்பட்டு வருகிறது.
மேலும் வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாகப் பழமை வாய்ந்த காசிமேடு கடற்கரையை நவீனமாக்க, ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதன் மூலம் காசிமேடு வரை திருவொற்றியூர் வரை உள்ள கடற்கரையைச் சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக சில அதிகாரிகள் நமக்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதிகளை ஒட்டி உள்ள ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே ஒரு மீன் அங்காடி கட்ட திட்டமிட்டுள்ளோம். அதைப் போன்று ஒரு சமுதாய நலக் கூடம், பள்ளிகள் மற்றும் விளையாட்டுப் பூங்காக்கள் என ஏறக்குறைய 50 விதமான பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செய்து தரப் போகின்றோம்.

இவற்றைத் தாண்டி கழிவுநீர் வெளியேறச் சரியான பாதைகளை உருவாக்குவது, நல்ல குடிநீர் வசதியைச் செய்து தருவதற்கான திட்டமிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன" என்கிறார்.

வடசென்னையில் சர்வதேச தரத்திற்குச் சவால் விடும் அளவுக்குக் கால்பந்து மற்றும் குத்துச்சண்டைப் போட்டி வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு சமூக பொருளாதார திட்டத்தின் மூலம் வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, ஆர்.கே. நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, சில புதிய திட்டக்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டங்களை சிஎம்டிஏ நிர்வாகம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து செயல்வடிவம் தர உள்ளன என்கிறார்கள் நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர்.

-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications