செந்தில் பாலாஜி சரியான ஆள்தான்! 50000 பேரின் லிஸ்டை பார்த்ததும் வியந்தேன்! புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்
சென்னை: மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று பாராட்டி பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இன்று காலை கோவையில் பல நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று மாலை 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இந்த நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுகவில் இணைந்த 50 ஆயிரம் பேரையும் வரவேற்கிறேன். பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உங்களை வரவேற்றார். செந்தில் பாலாஜி வரவேற்றாலும் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நானும் வரவேற்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து கலைஞர் சார்பிலும் நான் உங்களை வரவேற்கிறேன். ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று உங்களை அழைக்கிறேன்.

அழைப்பு
கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ என்று சொல்லிவிட்டு இங்கே வந்துள்ளீர்கள். மாற்று கட்சியில் இருந்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள் என்று மாற்றான் தாய் போல நடத்த மாட்டேன். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் போல செயல்படுவோம். தனி தனி தாய் ஈன்ற உடன் பிறப்புகள் நாம். நீங்கள் வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்து இருக்கிறீர்கள்.

பாராட்டு
உங்களை இங்கே கொண்டு வந்த செந்தில் பாலாஜிக்கு பாராட்டுக்கள் . செந்தில் பாலாஜி உங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு வந்துள்ளார். செந்தில் பாலாஜி ஒரு செயலை செய்தால் அது பாராட்டுக்குரிய செயல்தான். சரியான ஆளைதான் பொறுப்பாளராக போட்டுள்ளீர்கள் என்று என்னை பாராட்டுகிறார்கள். 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள் என்று செந்தில் பாலாஜி சொன்னதும் வியந்து போனேன்.

செந்தில் பாலாஜி
நான் வியந்ததை பார்த்து என்னிடம் 50 ஆயிரம் பேரின் பட்டியலையே கொடுத்தார். எல்லோருடைய பெயர், போன் நம்பரோடு செந்தில் பாலாஜி என்னிடம் லிஸ்டை கொடுத்தார். இங்கே கட்சி தொடங்கியதும் இங்கே அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்கிறார்கள். கட்சி தொடங்கும் முன்பே நாங்கள்தான் முதல்வர் என்கிறான். திமுக கட்சி தொடங்கி 19 ஆண்டுகள் கழித்துதான் ஆட்சிக்கு வந்தோம்.

என்ன சொன்னார்?
நாம் செய்யாத சாதனைகள் இல்லை. நாம் பார்க்காத சோதனைகள் இல்லை. நாம் படாத துயரங்கள் இல்லை. நாம் இப்போதும் நிலைத்து நிற்க காரணம் நாம் கொள்கை காரர்கள் என்பதால்தான். திராவிடம் எனது எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க கூடிய கொள்கை. அதன் திராவிடமாடல் ஆட்சிதான் இங்கே நடக்கிறது. ஓராண்டில் நாம் ஏகப்பட்ட சாதனைகளை செய்து இருக்கிறோம். இந்த சாதனைகள் தொடரும், என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications