நான் என் கடமையை சரியாக செய்துவிட்டேன்! தமிழக அரசின் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: தமிழக அரசு சார்பில் தமிழுக்கு தொண்டாற்றக்கூடிய 21 பேருக்கு விருது வழங்கி அவர்களை கவுரவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தனது கடமையை சரியாக செய்துவிட்டதாக கருதி மகிழ்வதாகவும் எதிர்காலத்தில் தமிழ் மொழிக்கு தொண்டாற்றக் கூடியவர்கள் இன்னும் பலர் உருவாகட்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே தமிழக அரசு தரப்பில் யார் யாருக்கு என்னென்ன பெயரில் விருதுகள் தரப்பட்டன என்ற விவரம் பின்வருமாறு;
- திருவள்ளுவர் விருது - மு.மீனாட்சி சுந்தரனார்
- தந்தைப் பெரியார் விருது - திராவிட இயக்கத்தின் கணினி என்று அழைக்கப்படும் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு
- டாக்டர் அம்பேத்கர் விருது - நீதியரசர் சந்துரு
- பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
- பெருந்தலைவர் காமராசர் விருது -இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன்
- மகாகவி பாரதி விருது- பாரதி கிருஷ்ணக்குமார்
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருது -புலவர் செந்தலை கவுதமன்
- கி.ஆ.பெ.விசுவநாதன் விருது -முன்னாள் துணை வேந்தர் மா.ராசேந்திரன்
- கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருது- பாரதி பாஸ்கர்
- சொல்லின் செல்வர் விருது - சூரியா சேவியர்
- ஜி.யு.போப் விருது - அ.சு.பன்னீர்செல்வம்
- உமறுப்புலவர் விருது - மதுரை நா.மம்முது
- இளங்கோவடிகள் விருது -நெல்லை கண்ணன்
- பாவாணர் விருது - கு.அரசேந்திரன்
- சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம்
- மறைமலையடிகள் விருது -சுகி சிவம்
- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது- முனைவர் இரா.சஞ்சீவிராயர்
- அயோத்திதாசப் பண்டிதர் விருது -ஞான அலாய்சிஸ்
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது -முனைவர் தனலட்சுமி
- சி.பா.ஆதித்தனார் விருது - உயிர்மை இதழ்
- தமிழ்த்தாய் விருது -தமிழ் எழுத்தாளர் சங்கம்
உங்களுக்கு வழங்கியதன் மூலமாக இந்த விருது பெருமை அடைகிறது. எனது கையால் வழங்கியதன் மூலமாக நானும் பெருமைப்படுகிறேன்.
விருதுகளைப் பெற்ற பெருமக்களே! உங்களுக்கு விருதுகளை வழங்கியதன் மூலமாக நான் எனது தமிழ்க் கடமையைச் சரியாகச் செய்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய தினம் 21 விருதுகள் தரப்படவிருக்கின்றன. விருதுக்கு தகுதியான பெருமக்களைத் தேர்வு செய்த மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும், தமிழ்வளர்ச்சித் துறை அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன். இந்த விருதுகளைப் பெற்றதன் மூலமாக உங்களது தொண்டு மேலும் மேலும் அதிகரிக்கட்டும். இவர்களைப் போலவே இன்னும் பலரும் உருவாகட்டும். தொண்டு செய்வோம் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் எனச் சொல்லி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடை பெறுகிறேன்.
-
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
நத்தம் புறம்போக்கு நில விவகாரத்தில் தமிழக அரசின் திடீர் திருப்பம்? பட்டா "இடி"க்கு விடிவு வருமா? -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications