உரையை முடித்த முதல்வர்..ஒடோடி வந்த பெண்.. புத்தக காட்சியில் காவல் அதிகாரியின் செயலால் நெகிழ்ச்சி
சென்னை : சென்னையில் நேற்று தொடங்கிய புத்தக கண்காட்சிக்கு விருது பெற தாமதமாக வந்த டாக்டர் மீனா கந்தசாமிக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னரும், பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான "பபாசி" சார்பில் வருடம் தோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நாற்பத்தி ஐந்தாவது புத்தக கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முதல்வர் விருது
மேலும் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உரைநடை நாடகம் கவிதை புதினம் பிற மொழி ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளில் பொற்கிழி விருதுகளை முதல்வர் வழங்கியதோடு, பபாசி விருதுகளான பதிப்பக செம்மல் கணபதி விருது, சிறந்த பதிப்பாளர் விருது, சிறந்த புத்தக விற்பனையாளர் விருது, குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் வழங்கினார்.

மருத்துவர் மீனா கந்தசாமி
பலருக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் மேடையில் உரையாற்றி முடிக்கும் தருவாயில் ஒரு பெண்மணி வேகமாக அந்த மைதானத்துக்குள் வருவதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பாதுகாப்பு அதிகாரியான திருநாவுக்கரசு கண்டார். உடனே, அவ்விடத்தில் பாதுகாப்பிலிருந்த காவலரை மைக்கில் அழைத்து அப்பெண்மணியைப்பற்றி விசாரிக்க சொல்லியிருக்கிறார்.

கலைஞர் பொற்கிழி விருது
அவரை விசாரித்தபொழுது அவர் டாக்டர் மீனா கந்தசாமி என தெரிவிக்க அப்பெயரைக் கேள்விப்பட்டதும் அதே மேடையில் அவருக்கு கலைஞர் பொற்கிழி விருது தரவிருந்ததும், அவர் வர இயலவில்லை என அறிவிப்பாளர் அறிவித்ததும் அவரது ஞாபகத்திற்கு வர அவரை முதல் வரிசையில் ஒரு ஓரத்தில் அமர வைக்கச் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமது உரையை நிறைவு செய்துவிட நன்றி உரை தொடங்கிவிட்டது.

முதல்வருக்கு, அதிகாரிக்கும் நன்றி
இந்த செய்தியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரும் நன்றியுரை முடிந்ததும் அவ்விருதினை தர சம்மதித்தார். நன்றியுரை முடிதந்தவுடன் டாக்டர் மீனா கந்தசாமிக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட டாக்டர் மீனா கந்தசாமி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் பரந்த மனதோடும் உடனடியான சமயோசித முடிவெடுக்கும் திறனோடும் இத்தகைய செயல்பாடுகளைச் செய்து முடித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான திருநாவுக்கரசுவிற்கு தனது மறக்க முடியாத நன்றியை உரித்தாகுவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications