கண்கள் சிவந்த ஸ்டாலின்.. தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து.. கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்!
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பின்னர் மசோதா நகலை எரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
தமிழ்நாட்டில் இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழ்நாட்டில் வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கவிட்டு போராட்டம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில் அண்டை மாநிலத் தலைவர்கள் கூட அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தொகுதி மறுவரையறையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்! பழனிசாமி யார் பக்கம்? கடைசி வரை கோழையாக, டெல்லியின் அடிமையாக இருக்கப் போகிறீரா? இப்போது பேசாமல் எப்போதுதான் பேசுவீர்கள்?
வரலாறு உங்களுக்குத் தந்திருக்கும் கடைசி வாய்ப்பு இது. ஒரு முறை, ஒரேயொரு முறை பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுங்கள். உறுதியான எஃகுக்குப் பெயர் பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு, இப்படி முதுகு வளைந்தே இருக்க அவமானமாக இல்லையா? #Delimitation கொண்டு தமிழர்களைத் தாக்குகிறது NDA எனும் New Delhi Alliance. ஏப்ரல் 23 வாக்குப்பதிவில், அவர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம்! அதற்கான ஒத்திகையாக கருப்புக்கொடி ஏற்றுவோம்! டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும் எதிர்ப்பில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆகவேண்டும்!
இந்த நிலையில் கூட பேசாமல் இருக்கும் பழனிசாமி, பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் இணைந்துவிடலாமே? இனியும் உங்களைத் தடுப்பது எது?, என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஸ்டாலின் போராட்டம்
இதையடுத்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்தார். பின்னர் மசோதா நகலை எரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
இன்று காலை முதலே சென்னை அண்ணா அறிவாலயம் மற்றும் முதல்வரின் இல்லம் கறுப்புக்கொடி மயமாகக் காட்சியளித்தது. தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முதல்வர் ஸ்டாலின், இன்று கறுப்புக்கொடியை ஏற்றி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
"மக்கள் தொகையைக் குறைத்தது குற்றமா? திட்டமிட்டுத் தெற்கின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு" என்பதே இந்த போராட்டத்தின் மையக்கருத்தாக இருக்கிறது.
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும்… pic.twitter.com/aSsOLN7K6J
பற்றி எரிந்த மசோதா நகல்: அதிரடி ஆக்ஷன்!
போராட்டத்தின் உச்சகட்டமாக, சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறை மசோதா நகலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவெளியில் தீயிட்டுக் கொளுத்தினார்.
எதிர்ப்பின் வீச்சு: வழக்கமாக சட்டசபையிலும், கடிதங்கள் மூலமும் எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர், இம்முறை நேரடியாக மசோதாவை எரித்தது திமுக தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில உரிமை: "எங்கள் மாநில உரிமைகளை அடகு வைக்க மாட்டோம்" என்கிற உறுதியான செய்தியை டெல்லிக்கு உணர்த்தும் விதமாகவே இந்தச் செயல் பார்க்கப்படுகிறது.
இது வெறும் அரசியல் தானா?
தமிழகத்தைப் பொறுத்தவரை, தொகுதி மறுவரையறை அமலுக்கு வந்தால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பலம் குறையும் என்கிற அச்சம் நீண்டகாலமாகவே உள்ளது. வட மாநிலங்களில் மக்கள் தொகை உயர்வால் அங்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழலில், கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்திற்குப் பிரதிநிதித்துவத்தில் 'பெனால்டி' கிடைப்பது முறையல்ல என்பதே நிதர்சனம். இதுவரை மக்களவையில் தென்னிந்தியாவின் (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா) பங்கு சுமார் 20% ஆக இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டின்படி இது 18% ஆகக் குறையும்.
இந்தி பெல்ட்டின் விஸ்வரூபம்: உத்திரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட 10 இந்தி பேசும் மாநிலங்களின் பங்கு 42%-லிருந்து 48% ஆக எகிறப்போகிறது. தமிழகத்தின் நிலை: தமிழகத்தின் இடங்கள் 39-லிருந்து 59 ஆக (சுமார் 26%) அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 79% வளர்ச்சியை எட்டும். அதாவது, நாம் ஒரு படி ஏறினால், அவர்கள் நான்கு படி ஏறுகிறார்கள்.
அடுத்தகட்டமாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அளவில் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மசோதா நகல் எரிப்பு என்பது வெறும் அடையாளமல்ல; அது கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பதற்கான 'போர் முரசு' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மத்திய அரசு செவிசாய்க்குமா அல்லது மோதல் போக்கு நீடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்.. ஸ்டாலின் அழைப்பு -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
தொகுதி மறுவரையறை + மகளிர் இடஒதுக்கீடு.. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
இவர் முடிவெடுத்தா.. மோடியின் தொகுதி வரையறை பிளான் தோற்கும்? சந்திரபாபு கையில் தென்னிந்திய எதிர்காலம் -
எங்க மாநிலத்தில் இப்படி இல்ல! ஸ்டாலின் பேச்சு புல்லரிக்க வைக்குது! புகழ்ந்த தென்னிந்திய நெட்டிசன்ஸ் -
"நெருப்போடு விளையாடாதீர்கள்!".. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. தமிழக தலைவர்களின் நிலைப்பாடு என்ன? -
மொத்த தென்னிந்தியாவிற்கே முன்னோடி.. தொகுதி மறுவரையறையை கையில் எடுத்த தமிழ்நாடு.. தரமான சம்பவம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications