தேர்தல் சீசன் வந்தா மட்டும் அடிக்கடி இங்கு வரும் பிரதமர் மோடி அவர்களே.. ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே எனக் குறிப்பிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி தனது வருகை குறித்து தமிழில் பதிவிட்டார். இந்நிலையில், பிரதமருக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

mk stalin narendra modi bjp

மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "Tamil Nadu counts the betrayals of NDA.

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ர சிக்‌ஷா அபியான் கல்வி நிதி எப்போது வரும்?

தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

பா.ஜ.கவின் முகவர் போல செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

தமிழ்ப் பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?

பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?

இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?

ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?

கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்?

தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத் தான் தரும்!" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன்.

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+