நொந்து கிடக்கும் அதிமுகவினர்தான் அந்த தியாகி.. சட்டசபையில் ஸ்டாலின் சரமாரி பதிலடி
சென்னை: அதிமுகவினர்தான் அந்த தியாகி என தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். அதிமுகவினர், யார் தியாகி என்ற பதாகை ஏந்தி வந்த நிலையில் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில் அந்த தியாகி யார் என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர்.

சட்டசபையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி தரவில்லை. இதனால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு ரூ 1000 கொடுப்பது போல் கொடுத்து ரூ 1000 கோடி ஊழல் செய்த தியாகி யார் என கேட்டு அதிமுகவினர் அமளி செய்தனர். அப்போது அவர்களை இன்று ஒரு நாள் முழுவதும் அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த தியாகி யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பதாக தெரிவித்தார். அவர் பேசுகையில் மறைந்த எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, மறைந்த ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை அதற்கு பிறகு பொறுப்பேற்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடியவர், தாங்கள் சிக்கியிருக்கக் கூடிய பல்வேற வழக்குகளில் இருந்து பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக யார் காலில் போய் விழுந்தார்களோ அவ்வாறு விழுந்த நேரத்தில் அதனை பார்த்து நொந்து நூடுஸ்ஸாகி போன அதிமுக தொண்டர்கள்தான் இன்றைய தியாகிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவினரின் சஸ்பெண்ட்டை நீக்குமாறும் சபாநாயகர் அப்பாவுவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையும் விடுத்திருந்தார். இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்த நிலையில் அதிமுகவினர் முதல் நாளே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அண்மையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத் துறை வெளியிட்டது.
அதில் தமிழகத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாகவும் டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது.
டாஸ்மாக் அலுவலர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications