இதுதான் ஸ்டாலின்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு! ஊராட்சி அமைப்புகளுக்கு குட்நியூஸ்
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 17.04.2023 அன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது ஏனைய அறிவிப்புகளுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதில், "உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும்" என்று கூறினார். மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் அல்லது மொத்த அலகுகள் இருபதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஓர் அலகு ஒதுக்கீடு செய்திட வேண்டும் என அரசினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் கீழ்க்காணுமாறு தெரிவித்துள்ளார்: ( ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சொந்த வருவாய் இனங்களை (Own sources of Revenue) அதிகப்படுத்திடும் வகையில் வணிக வளாகங்களைக் கட்டி வாடகை பெற்று உள்ளாட்சி நிதி நிலையை அதிகப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, 2 கட்டிமுடிக்கப்பட்ட வணிக வளாகங்களில் வாடகை / குத்தகை விடுவதற்கென அரசாணை நிலை எண்.277, ஊரக வளர்ச்சி (சில) துறை, நாள் 22.11.2001ல் ஆணை வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ளது.
தற்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்கிற அறிவிப்பின்படி கீழ்க்காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கலாம்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் அல்லது மொத்த அலகுகள் இருபதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஓர் அலகு மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம்.
இது தொடர்பாக தொடர்புடைய கிராம, வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சியின் மாற்றுத்திறனாளியின் எண்ணிக்கைக்கேற்ப மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து சதவிகிதம் அல்லது மொத்த அலகுகள் இருபதுக்கு குறைவாக இருப்பின் குறைந்தபட்சம் ஓர் அலகு ஒதுக்கீடு செய்வது குறித்து தொடர்புடைய ஊராட்சி அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இப்புதிய நடைமுறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்பெறும் எதிர்வரும் குத்தகைக் காலத்தின் போது நடைமுறைக்கு கொண்டு வரலாம்.

4. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்க முடிவு செய்து, அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து சதவிகிதம் அல்லது மொத்த அலகுகள் இருபதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஓர் அலகு மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து கீழ்க்கண்ட நிபந்தனைக்குட்பட்டு ஆணையிடப்படுகிறது.
கிராம, வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சியின் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து சதவிகிதம் அல்லது மொத்த அலகுகள் இருபதுக்கு குறைவாக இருப்பின் குறைந்தபட்சம் ஓர் அலகு ஒதுக்கீடு செய்வது குறித்து தொடர்புடைய ஊராட்சி அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
இப்புதிய நடைமுறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்பெறும் எதிர்வரும் குத்தகைக் காலத்தின் போது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications