சென்னை டூ டோக்கியோ.. மதுரை டூ சிங்கப்பூர்.. வருகிறது விமான சேவை? ஸ்டாலினின் அசத்தல் மூவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சிங்கப்பூர் நிறுவனங்களை இதில் பங்கேற்க அழைப்பு விடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு அந்நாட்டு நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சண்முகம் மற்றும் ஸ்டாலின் இருவரும் சந்தித்து உரையாடினர்.

CM Stalins letter to Union Minister regarding Chennai to Tokyo and Madurai to Singapore flights

இந்த சந்திப்பின்போது மதுரையிலிருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமானம் இயக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம், உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிங்கப்பூர் உள்துறை அமைச்சரின் கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 1962ம் ஆண்டு மதுரையில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இதனையடுத்து கடந்த 2010ம் ஆண்டு புதிய முணைய கட்டடம் திறக்கப்பட்டது. இங்கிருந்து ஓரிரு நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமான சேவை இருக்கிறது. ஆனால் மதுரையை சுற்றியுள்ள ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பரவலாக வேலை செய்து வருகின்றனர். எனவே இதனை பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை இந்த விமான நிலையம் சுங்க விமான நிலையமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

CM Stalins letter to Union Minister regarding Chennai to Tokyo and Madurai to Singapore flights

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டால் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தடையின்றி தொடரும். தற்போது மிகவும் குறைந்த அளவில்தான் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில்தான் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கையை வைத்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில், "ஜப்பான் நாட்டின் நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் தொழில்களை தொடங்கியுள்ளன. சென்னையிலும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான் மக்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தியாவின் ஜப்பானிய சமூகத்தின் தாயகமாக சென்னை திகழ்கிறது. அதேபோல ஜப்பானிலும் கணிசமான அளவில் புலம்பெயர் இந்தியர்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் இரு நாட்டிற்கு இடையேயும் வளர்ந்து வருகிறது. அதேபோல சுற்றுலா தொடர்பான உறவுகளும் வளர்ந்து வருகிறது. எனவே சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவையை மீண்டும் இயக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டுக்கு முன்னர் ஆல் நிப்பான் ஏரவேஸ் எனும் விமான நிறுவனம் சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்த சேவை பாதியில் நிறுத்தப்பட்டது. இது மீண்டும் தொடங்கப்படவில்லை. எனவே இதனை தொடக்க உதவ வேண்டும் என்று ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+