முதல்வரின் புகைப்பட கண்காட்சியில் "அந்த" போட்டோவை பார்த்ததும்.. கண்ணீர் விட்டு தேம்பிய சகோதரி செல்வி
முதல்வர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட அவருடைய சகோதரி செல்வி திடீரென கண்ணீர் விட்டு அழுதார்.
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியில் சகோதரி செல்வி சில படங்களை பார்த்தவுடன் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டார்.
முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா கடந்த 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை ரஜினிகாந்த் பார்வையிட்டு பாராட்டினார். ஒரு சில படங்களை கண்டு வியந்தார். அப்போது பேசிய ரஜினி, முதல்வரின் அரசியல் வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றுதான் என்றார்.

புகைப்பட கண்காட்சி
இந்த நிலையில் இந்த புகைப்பட கண்காட்சியை பிரபலங்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த புகைப்படக் கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் இளமை பருவம், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் கடந்து வந்த பாதை, மிசாவில் கைதான சிறை அனுபவங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியை பார்வையிட்டவர்கள்
இந்த கண்காட்சியின் இறுதிநாளான நேற்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, சிறுபான்மையினர் நலவாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். முதல்வரின் மருமகன் சபரீசன் தனது குடும்பத்தினருடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டார்.

செல்வி
அது போல் முதல்வரின் சகோதரி செல்வியும் கண்காட்சியை பார்வையிட வந்தார். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகி சிறையில் இருந்த போது அவர் அனுபவித்த கொடுமைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை கண்டு செல்வி கண் கலங்கினார். அது போல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கண்கலங்கிய ஸ்டாலின்
அப்போது தனது தந்தைக்கு அண்ணா அருகே துயில் கொள்ள ஒரு இடம் கிடைத்துவிட்டது என்ற உணர்ச்சி பூர்வமான மகிழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கண்கலங்கினார். அந்த புகைப்படத்தை பார்த்த செல்வி அதே இடத்தில் சிறிது நேரம் நின்று கண் கலங்கினார். பின்னர் தந்தையின் நினைவுகளுடன் கனத்த இதயத்துடன் வீடு திரும்பினார் செல்வி.

துர்கா ஸ்டாலின்
மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தது குறித்து துர்கா ஸ்டாலினும் முதல்வர் ஸ்டாலினும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். ஒரு முறை துர்கா ஸ்டாலின் தனது பேட்டியில், தனக்கும் ஸ்டாலினுக்கும் திருமணமாகி 3 மாதங்களில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது என்னிடம் வந்து தைரியமாக இரு, நான் விரைவில் வந்துவிடுவேன் என்றார்.

மிசா கொடுமை
தினமும் இன்று வருவார், நாளை வருவார் என பொழுதை கழிப்பேன். சாப்பிடும் போதெல்லாம் சிறையில் அவர் சாப்பிட்டிருப்பாரா என நினைத்து அழுவேன். அப்போது அத்தையும் (மாமியார் தயாளு அம்மாள்), காந்தி அக்காவும் (மு.க.அழகிரியின் மனைவி) எனக்கு ஆறுதல் கூறுவார்கள். அவ்வப்போது மாமாவும் (கருணாநிதி) கவலைப்படாதேம்மா என கூறுவார். என் அத்தையிடமும் சொல்லி அந்த பெண்ணை அழ வேண்டாம் என சொல் என்பார். ஒரு வருடம் நரகமாகவே இருந்தது என உருக்கமாக துர்கா தெரிவித்திருந்தார்.

ஜெய்பீம் கொடுமை
அது போல் முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது நெறியாளர் கோபிநாத் , நீங்கள் முதல்வரானதும் பார்த்த முதல் படம் எது என கேட்ட போது, முதல்வர் ஸ்டாலின் தம்பி சூர்யா நடித்த ஜெய்பீம்தான். அந்த படம் பார்த்ததுமே எனக்கு மிசா கொடுமைகள்தான் நினைவுக்கு வந்தது. அந்த படத்தில் அனுபவிக்கும் சித்ரவதைகளை நானும் அனுபவித்திருக்கிறேன் என்றார்.

கருணாநிதி மறைவு
அது போல் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அவரை அண்ணாவின் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்ய அப்போதைய அதிமுக அரசிடம் கேட்ட போது மறுக்கப்பட்டது. இத்தனைக்கும் இது கருணாநிதியின் ஆசை. இது தொடர்பாக முதல்வராக இருந்த பழனிசாமி, துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ், அமைச்சர்களாக இருந்தவர்களிடம் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். ஆயினும் இடம் கிடைக்கவில்லை. வெவ்வேறு இடங்களை தருவதாக அதிமுக அரசு சொன்னது.

அவமரியாதை நேரக் கூடாது
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் நாம் தலைவரின் உடலை கொண்டு சென்று நல்லடக்கம் செய்வோம். என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்துவிடுவோம் என்றனராம். ஆனால் ஸ்டாலின்தான் அந்த இடத்தில் நம் தலைவருக்கு எந்த அவமரியாதை செயலும் அப்போதைய அரசால் ஏற்படக் கூடாது, எதுவாக இருந்தாலும் சட்டபடி செல்லலாம் என கூறினாராம். அதன்படி மாநிலங்களவை எம்பியாக உள்ள வழக்கறிஞர் வில்சன்தான் இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விடிய விடிய வாதாடி மெரினாவில் இடத்தை பெற்றுத் தந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பெருக்கில் உடைந்து அழுதுவிட்டார். தந்தையின் அஞ்சலிக்கு வந்த மக்களை பார்த்து கும்பிட்டார். பின்னர் அவரை கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ ராசா உள்ளிட்டோர் தேற்றினர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி!












Click it and Unblock the Notifications