Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக நாடுகளில் தவிர்க்க முடியாத சக்திகள் தமிழர்கள்! நெஞ்சை நிமிர்த்தி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாடுகளில் தவிர்க்க முடியாத சக்தியாகத் தமிழர்கள் விளங்கி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் திருநாள் விழாவில் கலந்துகொண்டு பேசும் போதும் அவர் இதனைக் கூறினார்.

மேலும், உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கே உழைப்பால் தன்னை மட்டுமின்றி, தனக்கு வாழ்வளித்த நாட்டையும் உயர்த்திக் காட்டியவர்கள் தமிழர்கள் என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

உலகத் தமிழர்களை பெருமைப் படுத்தும் வகையில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

 தவிர்க்க முடியாத சக்தி

தவிர்க்க முடியாத சக்தி

எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கே காடு திருத்தி, கழனி செழிக்கச் செய்து, உழைப்பால் தன்னை மட்டுமின்றி, தனக்கு வாழ்வளித்த நாட்டையும் உயர்த்திக் காட்டியவர்கள் தான் தமிழர்கள். உலக நாடுகளில் குடியேறிய நம் தமிழர்களின் உழைப்பும் தியாகமும் தாய்மொழியாம் தமிழுக்கும் தாய்த் தமிழ்நாட்டிற்கும் புகழ் சேர்க்கும் வகையில், அந்தந்த நாடுகளில் அரசியல், தொழில், பொருளாதாரம் எனப் பல நிலைகளில் தவிர்க்க முடியாத சக்தியாகத் தமிழர்கள் விளங்கி வருகின்றனர்.

தமிழர்களின் ஆற்றல்

தமிழர்களின் ஆற்றல்

எந்த நாட்டுக்குச் சென்றாலும், சொந்த நாட்டையும் தாய்மொழியையும் தமிழர்கள் தங்கள் நெஞ்சக் கூட்டில் அடைகாத்து வைத்திருப்பது வழக்கம். விதை நெல்லாகத் தமிழை எடுத்துச் சென்று, தாங்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் விளையும் நிலங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள். பல தலைமுறைகள் கடந்த அயலகத் தமிழர்களின் ஆற்றலும், ஆராய்ச்சித் திறனும், உழைப்பின் மேன்மையும், உயர்ந்த பொறுப்புகளும் இன்று தனிப்பெரும் வரலாறாக உருவாகியுள்ளன.

 அயலகத் தமிழர்களின் நலன்

அயலகத் தமிழர்களின் நலன்

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பார்கள். அதுபோல அயலகத்தில் குடியேறி வரும் தமிழர்கள், அங்கே பணிபுரியும் இடத்திலும் சிரமத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகக்கூடிய சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் வருகிறது. அதுமட்டுமின்றி மருத்துவ ரீதியாகவும் இன்னலுக்கு ஆட்படுகின்ற நிலைமையும் உள்ளது. எனவேதான், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரான நம் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, 2010-ஆம் ஆண்டில், அயலகத் தமிழர்களின் நலன் காத்திட, ஒரு துறையை உருவாக்கிட முனைந்தார்கள்.

 பத்தாண்டு கால இடைவெளி

பத்தாண்டு கால இடைவெளி

2011-ல் இதனைத் தனித் துறையாக உருவாக்கிட, தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. அதனை உடனடியாக நிறைவேற்றிட வாய்ப்பு அமையவில்லை. காரணம், எப்படி உங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடைவெளி உள்ளதோ, அதுபோல தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மீண்டும் அமைவதற்கு ஒரு பத்தாண்டு கால இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

அயலகத் தமிழர் நாள்

அயலகத் தமிழர் நாள்

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட மாடல் அரசு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, அயலகத் தமிழர்களின் நலனுக்கென தனியே ஓர் அமைச்சகத்தை உருவாக்கி அமைச்சரையும் நியமித்துள்ளது. அதுமட்டுமின்றி அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில் உதவி புரிந்து வரும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் "அயலகத் தமிழர் நாள்" கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் பரப்புரை கழகம்

தமிழ் பரப்புரை கழகம்

அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்திட முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டோடு தமிழ் பரப்புரை கழகத்தைத் தொடங்கி வைத்தேன். இதன் மூலம் அயலகத் தமிழர்கள், தமிழை எளிமையாக கற்பதற்கான தமிழ்ப் பாட நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான துணைக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய வழியில் தமிழைக் கற்பித்தலும் தொடங்கப்பட்டுள்ளது.

 புலம்பெயர் தமிழர் நலவாரியம்

புலம்பெயர் தமிழர் நலவாரியம்

பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழர்களின் நலன் பேணவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புலம்பெயர் தமிழர் நலவாரியம் உருவாக்கப்பட்டு கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் அதன் தலைவராகவும், வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்கள் அரசுசாரா உறுப்பினர்களாகவும், அரசு உயர் அலுவலர்களை உள்ளடக்கியதாகவும் இந்த வாரியம் செயல்பட உள்ளது.

288 தமிழர்களின் உடல்கள்

288 தமிழர்களின் உடல்கள்

கடந்த ஓராண்டில் மட்டும், வெளிநாடுகளில் இறந்துபோன 288 தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருதல்,அங்கே இறந்தவர்களின் ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருதல், மருத்துவ இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல், -இதுபோன்ற வேலைகளை அங்குள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது.

கடன் வசதி

கடன் வசதி

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், வெளிநாடுகளிலிருந்து 80 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பணி வாய்ப்பை இழந்த காரணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் செலவில்

தமிழ்நாடு அரசின் செலவில்

கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்ட போது, இந்திய ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடனும், உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடனும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு உதவி

இலங்கைக்கு உதவி

கடந்த ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு அரசின் சார்பிலே உடனடியாக அவர்களுக்குத் தேவையான 174 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பால்பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்து, மனிதநேய அடிப்படையில் அங்குள்ள மக்களின் இன்னலைப் போக்கிட உதவிக்கரம் நீட்டியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+