Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லதை நினைச்சுதான் போன முறை அனுப்பினோம்.. ஆனா வரலை.. இந்த முறையும் சமாளிப்போம் - ஸ்டாலின் ரிப்ளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசிடம் புயல் வெள்ள சேதத்திற்காக நிதி பெறுவது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூடாக பதில் அளித்துள்ளார். கடந்த முறை ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்டோம் முழுமையாக தரவில்லை, சமாளித்தோம். இந்த முறையும் கேட்கிறோம். தரவில்லை என்றாலும் சமாளிப்போம்" ‌எனத் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக அரசு நிர்வாகம் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. முதல்வர் ஸ்டாலின் நேற்று எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

mk stalin cyclone fengal rain

முதல்வர் ஸ்டாலின்: கனமழை எச்சரிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, மழை நீர் உடனடியாக வெளியேற்ற நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்த நிலையில், கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கொளத்தூர் செல்வி நகரில் மக்களை சந்தித்து குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இன்றும் முதல்வர் ஆய்வு: அதைத்தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரண பணிகளில் களபணியற்றி வரும் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிவசங்கர், செந்தில் பாலாஜி, சி.வி.கணேசன், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

ஸ்டாலின் பேட்டி: அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "சென்னையில் கன மழை பெய்த நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. வடசென்னை பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

1686 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கிறது. 21 சுரங்கப் பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 முகாம்கள் அமைக்கப்பட்டு 1018 நபர்கள் தங்க வைக்கப்பட்டு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 9,10,000 உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தில்: சென்னையில் உள்ள 386 அம்மா உணவகத்தில் 1 லட்சத்திற்கும் மேலாக உணவு வழங்கப்பட்டுள்ளது. எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் இருந்து வருகிறது. கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை என மக்களே தெரிவித்தனர்.

வரலாறு காணாத அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி , சிவசங்கர், எம் ஆர் கே பன்னீர்செல்வம் களத்தில் உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார்.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட 12 குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 26 முகாம்களில் 1373 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேவையான நிதி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்கிடவும் , பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள குழுவை அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை விட்ட பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு அதற்கு பிறகு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். புயல் சேதங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் நிதி கோருவது குறித்து நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஸ்டாலின் கொடுத்த பதில்: கடந்த காலங்களில் ஒன்றிய அரசிடம் கோரப்பட்ட பேரிடர் நிதி முழு முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில் இந்த முறையும் கோரிக்கை வைத்தால் நிதி கிடைக்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "நல்லதே நினையுங்கள், ஏன் கெட்டதை நினைக்கிறீர்கள்.. நல்லதே நினையுங்கள் நடக்கும். கடந்த முறை ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்டோம் முழுமையாக தரவில்லை, சமாளித்தோம். இந்த முறையும் கேட்கிறோம். தரவில்லை என்றால் முன்பு போலவே சமாளிப்போம்" ‌எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+