தாலிக்குத் தங்கம் திட்டம் ரத்து ஏன்? அவையில் கொந்தளித்த அதிமுக வேலுமணி.. விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தாலிக்குத் தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 18 ஆம் தேதி 2022- 2023 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் முத்தமிழறிஞர் கருணாநிதியால் 1989 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது.

பொருளாதாரம்
மாறி வரும் சூழலுக்கேற்ப பொருளாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்ய இந்த திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது என அறிவித்தார்.

தாலிக்குத் தங்கம்
இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதிமுக கண்டனம் தெரிவித்தது. இன்றைய தினம் பட்ஜெட் கூட்டத் தொடரின் மீதான விவாதத்தின் போது அதிமுக, திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நிதியுதவி அளித்து திட்டத்தை தொடர வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே இந்த திட்டம் நிறுத்தம் என மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என அதிமுக விமர்சனம் செய்தது.

முதல்வர் ஸ்டாலின்
இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார். அவர் கூறுகையில் பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து, அதனால்தான் திருமண உதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். பெண்ணுரிமை என்ற அடிப்படையில் திருமண உதவி திட்டத்தை மாற்றியுள்ளோம்.

சமூகநீதி
சமூகநீதி, பெண் கல்வி, வெளிப்படை தன்மை அடிப்படையில் பெண் கல்வி திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமண உதவி திட்டம் மூலம் வெறும் 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்தனர். ஆனால் உயர் கல்வி திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயனடைவர்.

உயர்கல்வி திட்டம்
கட்சி பாகுபாடின்றி உயர்கல்வி திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். திருமண உதவி திட்டத்தில் பலர் முறைகேடு செய்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 24.5% பேர் மட்டுமே தகுதியானவர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications