Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் மீட்டிங் முடியல.. முதல்ல இதை சொல்லிட்டு வான்னு முதல்வர் அனுப்பினார்.. அன்பில் மகேஷ் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 நாட்களாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இதை உடனே போய் சொல்லிவிட்டு வா என்று என்னை அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின் எனத் தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை உறுதி அளித்தும் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடாத நிலையில், இன்று அரசு சார்பில் ஆசிரியர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

CM Stalin sent me to tell immediately: says School Education Minister Anbil Mahesh Poyyamozhi

அமைச்சர் பிரஸ் மீட்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நிதி நிலைமை சரியில்லாத சூழலிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வரும் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கும் சேர்த்து இன்றைக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறோம்.

இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்று வந்தாலும், இடையிடையே என்னை அழைத்து என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள், நமது விளக்கத்திற்கு அவர்கள் கருத்து என்ன என்பது பற்றியெல்லாம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

உடனே என்னை போய் சொல்லச் சொன்னார்: அதன் ஒருபகுதியாகத்தான் இன்றைக்கு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறோம். என்னதான் நிதி நெருக்கடி, கூடுதல் செலவினம் என்று சொன்னாலும் ஆசிரியப் பெருமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இன்னும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதற்கிடையே என்னை அழைத்து உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்து இதனைச் சொல்லிவிட்டு வா என்று அனுப்பினார். அந்தவகையில் ஊடகங்களைச் சந்தித்துள்ளோம். ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கனிவோடு பரிசீலிக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவை ஏற்று எங்களை நாங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.

ஆசிரியர்கள் இப்படி கேட்டிருக்கணும்: ஆசிரியர்கள் உங்களை வருத்திக்கொண்டு, அந்த மன உளைச்சலை முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறைக்கும் வழங்காமல், நீங்கள் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். உங்கள் தேவைகளை பார்த்துப் பார்த்துச் செய்ய நம் முதலமைச்சர் இருக்கிறார். உங்களை வருத்திக்கொள்ளும் வகையிலான இந்தப் போராட்டங்களை இத்துடன் முடித்துக்கொண்டு மாணவச் செல்வங்களுக்கு பாடம் புகட்டும் பணி, எண்ணும் எழுத்தும் பயிற்சிப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒருகாலத்தில் ஆசிரியர்கள் போராடும் போதெல்லாம் அவர்களை அழைத்துக் கூட பேசாத நிலை இருந்தது. இன்று யார் யாரோ போய் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போது, எங்கள் ஆசிரியப் பெருமக்கள் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். 10 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சியில் இருந்தீர்கள், என்ன செய்தீர்கள் எனக் கேட்டிருந்திருக்கலாம். ஆனால், பரவாயில்லை. இந்த நேரத்தில் ஆசிரியர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முதல்வர் ஆசைப்படுகிறார்.

CM Stalin sent me to tell immediately: says School Education Minister Anbil Mahesh Poyyamozhi

ஆனால், நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இப்போதைக்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறோம். ஆசிரியர்களே, அரசின் மீது குறிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள், உங்களுக்கான பணிகளைச் செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம்" எனப் பேசினார்.

முக்கிய அறிவிப்புகள்: மேலும், சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்.

அதேபோல பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்போருக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 58 ஆகவும் உயர்த்தப்படும் ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+