Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் முதல்வன் திட்டம் செய்த சாதனை.. பெருமை பொங்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்! டேட்டாவை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் சாதனை குறித்து பெருமிதத்தோடு பகிர்ந்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டின் தரமான கல்வியோடு - மாணவர்களின் திறன் வளர்க்கும் நமது திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளும், நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான புதிய வாயிற்கதவுகளைத் திறப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளன்று 'நான் முதல்வன்' என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஏழை எளிய மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இது எனது கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

CM Stalin shared with pride about the achievement of Naan muthalvan scheme

கல்வி உதவித்தொகை தொடங்கி, வேலைவாய்ப்பு வரை பல்வேறு விஷயங்களை நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழக அரசு செய்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "தமிழ்நாட்டின் தரமான கல்வியோடு - மாணவர்களின் திறன் வளர்க்கும் நமது திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளும், நமது இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான புதிய வாயிற்கதவுகளைத் திறப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். நான் முதல்வன் எனப் பெருமை கொள்ளும் ஒளிநிறைந்த நாளை நம் இளைஞர்களுக்காக.." என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பட்டியல் ஒன்றை ரீட்வீட் செய்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் படித்த தமிழக மாணவர்கள் தற்போது எந்தெந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்ற விவரம் இடம்பெற்றுள்ளது. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 525 ஆகும்.

மலேசியாவில் உள்ள சர்வதேச பல்கலைக்கழகம், தைவான் ஐ-ஷு பல்கலைக்கழகம், எய்ம்ஸ், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, கர்நாடகா மத்தியப் பல்கலைக்கழகம், ஐஐடி, என்.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.டி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ், என்.ஐ,எஃப்.டி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம், உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+