Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணன் சிவக்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம்.. இது எனக்கு பெருமை.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மூத்த நடிகரும், சிறந்த ஓவியருமான சிவக்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், ஓவியருமான சிவக்குமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரகேகர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பக்கம் வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் டாக்டர் பட்டத்தை அளித்தார்.

CM Stalin speech

இதன்பின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஓவியர்கள் சிவக்குமார் மற்றும் சந்ரு ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்காக பெருமை கொள்கிறேன். அதிலும் பல்துறை வித்தகரான அண்ணன் சிவக்குமாருக்கு இந்த பட்டம் அளிக்கப்பட்டது மிகவும் பொருத்தமான ஒன்று. சிவக்குமார் புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல.. நல்ல ஓவியர், சிறந்த சொற்பொறிவாளர்..

இவரின் ஓவியங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரது வீட்டிற்கே சென்று சுமார் ஒன்றரை நேரத்திற்கு மேல் பார்வையிட்டு உரையாடி இருக்கிறார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களுடன் நட்பு பாராட்டியவர். எனக்கும் அண்ணனாக இருக்கிறார். திமுக ஆட்சி அமைந்த பின், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சூர்யா மற்றும் கார்த்தியோடு வந்து ரூ.1 கோடி அளித்தார்.

சிவக்குமார் அண்ணனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதில் எனக்குதான் பெருமை. அதேபோல் ஓவியர் சந்ரு முற்போக்கு சிந்தனையாளர்.. தொல்லியல் துறையில் பணியாற்றிய போது, சிற்றன வாசல், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட ஓவியங்களை நகலெடுத்து அருங்காட்சியக பணிகளில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள ரவுண்டானாவில் உள்ள பல சிலைகள் இவர் உருவாக்கியதுதான். திறமையான பல கலைஞர்களையும் உருவாக்கி வருகிறார்.

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்திற்கு நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை.. இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவும் இல்லை.. 2021ஆம் ஆண்டுக்கு பின் இந்த பல்கலைக்கழகத்தை இன்னும் செழுமைப்படுத்தி இருக்கிறோம். இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு.. இந்த அரசியல் மாண்பு நடுவில் இல்லாமல் போயிருந்தாலும், எதிர்காலத்தில் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

2021ஆம் ஆண்டுக்கு பின் ஏராளமான மாணவர்கள் இங்கு சேர்ந்துள்ளார்கள். அதன்பின் புதிய துறைகளுக்கான நிதி அளித்ததோடு, புதிய கட்டங்களையும் திறந்து வைத்தோம். கலை தான் மனிதர்களை மற்ற உயிர்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதோடு, மேம்படுத்தியும் காட்டுகிறது. இசை, கலையை முறையாக பயின்று பட்டம் பெற்றுள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

சமூக வளர்ச்சிக்கு உற்பத்தி, தொழில்நுட்பம், பொருளாதாரம் வளர்ச்சி அவசியமோ, சமூகத்தின் சிந்தனை வளத்திற்கு கலைஞர்களின் வளர்ச்சியும் அவசியம். கலைகல், கலைஞர்கள் போன்றும் மண் நம்முடைய தமிழ் மண். மகிழ்ச்சி, சோகம், சோர்வு, ஓய்வு, சிந்தனை என்று அனைத்திற்கும் இசை அவசியம். காரில் நீண்ட தூரம் பயணிக்கும் போது அரசியல் விவாதங்களை கடந்து, பாடல்களை அதிகமாக கேட்பேன்.

கலையையும், கலைஞர்களையும் போற்ற வேண்டிய நல்ல அரசின் கடமை. பட்டம் பெற்ற அனைவரும் காலத்தை கடந்து வாழும் படைப்பை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழுக்கும், நம் பண்பாட்டுக்கும் பயனுள்ள படைப்புகளை கொடுக்க வேண்டும். அதனால்தான் இளையராஜாவிடம் சங்கப் பாடல்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் இசையமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

மதுரை திருப்பரங்குன்றம் வலையங்களத்தில் கிராமிய கலைப் பயிற்சி பள்ளி அமைக்க தமிழக அரசின் சார்பாக நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் கவின் கலைகளில் புதிதாக முதுகலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படும். இதன் மூலமாக மாணவர்கள் புதிய திறமைகளை வளர்க்கவும், வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.

இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக நிர்வாகத் திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஊதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.3 கோடி அளிக்கப்படும் மானியம் ரூ.5 கோடியாக அதிகரிக்கப்படும். ஏஐ வந்தாலும், மனித சிந்தனையை வெல்ல முடியாது. அதனால் மாணவர்கள் கவலைக் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+