"ஸ்டாலின்கிட்ட பேசணும்".. பாலுவிடம் போனை வாங்கிய கெஜ்ரிவால்.. காலில் சொன்னதுதான் மேட்டரே.. ட்விஸ்ட்
சென்னை: இந்தியா கூட்டணியின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் போன் மூலம் முக்கியமான சில விஷயங்களை பேசி இருக்கிறார் ..
இந்தியா கூட்டணியின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் 1-ந்தேதி டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொள்வதாக இருந்த முதல்வர் ஸ்டாலின், டெல்லி செல்வதை கடைசி நேரத்தில் தவிர்த்தார். இதற்கு, திடீரென அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல்தான் காரணம் என சொல்லப்பட்டது.

ஸ்டாலின் செல்லவில்லை; ஆனால், நிஜ காரணம், ' எக்ஸிட் போலில் பாஜக கூட்டணிதான் 350-க்கும் அதிகமான சீட்டுகளைப் பிடிக்கும் ' என்று ரிசல்ட் வரவிருப்பதை ஸ்டாலின் தெரிந்து கொண்டதாலேயே டெல்லி செல்வதை ரத்து செய்தார் என்று சொல்கின்றனர்.
மேலும் தேர்தல் முடிவுகளை மனதில் வைத்தே ஜூன் 1 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதில் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும். இதனால் ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை.
போனில் பேசினார்; இந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக டி.ஆர்.பாலு, ஸ்டாலின் வர இயலாத சூழலை இந்தியா கூட்டணியின் தலைவர்களிடம் விவரித்திருக்கிறார். கூட்டம் முடிந்ததும், ஸ்டாலினிடம் பேச வேண்டும் என டி.ஆர். பாலுவிடம் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியிருக்கிறார்.
உடனே தனது மொபைலிலிருந்து ஸ்டாலினுக்கு ஃபோன் போட்டு கெஜ்ரிவாலிடம் பாலு கொடுக்க, "மிக நம்பிக்கையாக இருங்கள். நாம் ஜெயிப்போம். பாலுவிடம் நிறைய விசயங்கள் பேசியிருக்கிறேன். அவர் உங்களிடம் நேரில் சொல்வார், ஜாமீன் முடிவதால் சிறைக்கு செல்கிறேன். அதற்கு முன்பாக உங்களிடம் பேச வேண்டும் என நினைத்தேன்.
எக்சிட் போல் மூலம் உளவியல் சிக்கலை மோடி ஏற்படுத்துகிறார். இதையெல்லாம் புறந்தள்ளுவோம்" என்று ஸ்டாலினிடம் நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் கெஜ்ரிவால். அவரது பேச்சு, ஸ்டாலினுக்கு உற்சாகத்தை தந்தது என்கிறார்கள் அறிவாலயத் தரப்பில்.
ஸ்டாலின் ஐடியா: இது போக முதல்வர் ஸ்டாலின் இந்திய கூட்டணி தலைவர்களுக்கு முக்கியமான ஐடியா ஒன்றை கொடுத்து உள்ளாராம். எம்பி டி ஆர் பாலு மூலம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில தகவல்களை அனுப்பி உள்ளாராம். அதில், இப்போது காங்கிரஸ், பாஜக மற்றும் என்டிஏ கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை என்றாலும் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.
இப்படிப்பட்ட சமயங்களில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் அதற்கு பதிலாக பாஜக தான்தான் தனியாக அதிக இடங்களை வென்ற கட்சி . அதனால் எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை அளிக்க வேண்டும். ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உரிமை கோர வாய்ப்புகள் உள்ளது.
இந்த விவகாரத்தில் அதிகாரம் அவர்கள் பக்கம் இருக்கும். இதை நாம் விட கூடாது. அதனால் நாம் எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். நம்முடைய எம்பிக்கள் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று பிற்பகலில் தெரிந்தால் அன்று மாலையே டெல்லிக்கு செல்ல வேண்டும்.
அன்று இரவே இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். அமித் ஷா வேகமா இருப்பார். நாம் அவரை விட வேகமாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் கடந்த தேர்தலுக்கும் முந்தைய தேர்தலில் தொங்கு சட்டசபை உருவான போது மெஜாரிட்டி இருந்த காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லை என்றாலும் ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்தார்.
அதே மாடலை தேசிய அளவில் பாஜக செய்யலாம் என்கிறார்கள். அதை நாம் விட கூடாது, என்று ஸ்டாலின் ஐடியா கொடுத்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications