கமல்ஹாசன் + திருமா + வைகோ.. ஸ்டாலின் போட்ட பிரம்மாண்ட பிளான்! லோக்சபா தேர்தலில் அவருக்கு சீட்டாமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை சமீபத்தில் முடிந்த நிலையில் திமுக அளவிலான தமிழ்நாடு கூட்டணி ஆலோசனை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

CM Stalin to discuss about the seat sharing in Lok Sabha election 2024 with Tamil Nadu parties

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது

என்ன ஆலோசனை செய்யப்பட்டது?: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் சீட் பகிர்வு ஏற்பாட்டை எப்படி விரைவாக ஏற்படுவதுவது , கூட்டணியை எப்படி விரைவாக உறுதி செய்வது என்பது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க நேரத்தை வீணடிக்க வேண்டாம், இதில் உடனே முடிவு எடுக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) எதிராகப் போராட எந்த தியாகமும் செய்யத் தயார் என்று கூட்டத்தில் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினும்.., எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து கூட்டணியை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையில், பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் குறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்ல தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். கூட்டணி அமைப்பது எப்படி, போட்டியிடுவது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. இதில் இன்று இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

5 நாட்கள் நடக்க உள்ள திடீர் நாடாளுமன்ற கூட்டம் குறித்தும், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன் நடத்த வேண்டிய சர்வே குறித்தும் இதில் ஆலோசனைகள் செய்யப்பட்டன. முக்கியமாக நாடாளுமன்ற தேர்தல் முன்பே நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது டிசம்பர், ஜனவரி மாதமே நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக அதை பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை சமீபத்தில் முடிந்த நிலையில் திமுக அளவிலான தமிழ்நாடு கூட்டணி ஆலோசனை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது.

ஆலோசனை: அதன்படி தமிழ்நாட்டில் ஸ்டாலின் பின்வரும் ஆலோசனைகளை செய்யும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கொடுப்பது. யார் யாருக்கு இடம் கொடுப்பது. எங்கே வேட்பாளர்களை நிறுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்படலாம்.

முக்கியமாக கூட்டணியில் இருக்கும் முக்கியமான தலைவர்களுக்கு இப்போதே தேர்தல் பணிகளை செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொகுதி ஒன்றும் டிக் அடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை. இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் கமலுக்கு வெற்றி வாய்ப்புகளும் உள்ளன. பாரத் ஜோடோ யாத்திரையிலும் இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக காணப்பட்டார்.

கமல்ஹாசனை தென் சென்னையில் களமிறக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தென்சென்னையில் கமல்ஹாசன் லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுவார். மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் திமுக வேட்பாளராக இவர் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பாக சிவகங்கை கார்த்திக் சிதம்பரத்திற்கும், நாகர்கோவில் விஜய் வசந்த்திற்கும் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மோடி போட்டியிட உள்ளதாக பேச்சு வரும் நிலையில், இஸ்லாமிய கட்சிகளுக்கு பதிலாக இங்கே காங்கிரஸ் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இது போக, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தென்காசி, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு இந்த முறை திமுக களமிறங்கும் என்று பாராளுமன்ற தேர்தல் திமுக என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் சர்வே பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் விரைவில் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+